திருப்பூர் காவுத்தம் பாளையம் தொல்லியல் பகுதியில் 750 கிலோ வாட் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தொல்லியல் அகழாய்வு பணிகளை மேற்கொள்ள வலியுறுத்தியும் 2 ஆண்டுகளாக காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வந்த நிலையில் இன்று முதல் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் துவங்கியது.
திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் அடுத்த காவுத்தம்பாளையம் கிராமத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர் 16 கிராமங்களை உள்ளடக்கிய இப்பகுதியில் 3000 ஆண்டுகள் பழமையான நடுக்கல், ஆயிரம் ஆண்டுகள் பழமையான வரலாற்று சின்னங்கள் சங்க கால மக்கள் பயன்படுத்திய பானை ஓடுகள் மண் படிமங்கள் சுடு மண், இரும்பு உருக்கு படிமங்கள் என வரலாற்று ஆதாரங்கள் கிடைக்கக்கூடிய இந்தப் பகுதியில் தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு பணிகள் மேற்கொண்டு தமிழர் பெருமையை கண்டறிய வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில் இப்பகுதியில் 100 ஏக்கர் பரப்பளவில் 265 கிலோவாட் துணை மின் நிலையம் அமைக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது துணை மின் நிலையம் அமைக்கும் பட்சத்தில் தொல்லியல் பொருட்கள் பாதிப்படையும் என்பதால் துணை மின் நிலையத்தை அமைக்க கூடாது எனவும் இப்பகுதியில் அகழாய்வு பணிகள் மேற்கொள்ள வேண்டும் என கூறி கடந்த இரண்டு ஆண்டுகளாக அப்பகுதியில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் இன்று முதல் செங்கப்பள்ளி அருகே கோவை சேலம் தேசிய நெடுஞ்சாலையில் குமரிக்கல் தொல்லியல் பாதுகாப்பு இயக்கத்தினர் 100க்கும் மேற்பட்டோர் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை துவக்கி உள்ளனர்.
