சேலம் மாவட்டம் சங்ககிரியில் தனியாக வசித்து கொண்டு நியூட்ரிசன் சென்டர் நடத்தி வந்த ராஜேந்திரன் என்பவரை சொத்திற்காக அவரது மனைவி மற்றும் மகன் ஆகியோர் கூலிப்படையை ஏவி கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அவரது மனைவி,மகன் உட்பட எட்டு பேரை போலீசார் கைது சிறையில் அடைத்ததோடு இருவர் மீது குண்டாஸ் சட்டம் பாய்ந்ததால் பெரும் பரபரப்பு.

சங்ககிரி அருகேயுள்ள பக்காலியூர் அருவங்காடு பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் (65) இவர் சங்ககிரியில் இருந்து திருச்செங்கோடு செல்லும் சாலையில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஸ்டேட் பேங்க அருகில் தனியாக வீடு வாடகைக்கு எடுத்து நியூட்ரிசன் சென்டர் நடத்தி வந்துள்ளார்.

இவருக்கு திருமணமாகி ராணி (60) என்கிற மனைவியும், அரவிந்தன்(29) என்கிற ஒரு மகனும் கார்த்திகா(32) என்ற ஒரு மகளும் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக இருவரும் தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர்.

மேலும் ராஜேந்திரனுக்கு சொந்தமான சுமார் 10 ஏக்கர் நிலம் சம்பந்தமாக கணவன், மனைவிக்கிடையே பிரச்சனைகள் இருந்து வந்த நிலையில்
ராஜேந்திரன் மட்டும் சங்ககிரி நகர் பகுதியில் வீடு ஒன்று வாடகைக்கு எடுத்து தனியாக வசித்து கொண்டு தான் குடியிருக்கும் வீட்டிலேயே தினந்தோறும் உடல் எடையை குறைக்கும் வகையில் நியூட்ரிசன் சென்டர் நடத்தி வந்துள்ளார்.

இதனிடையே கடந்த மார்ச் 31 தேதி திங்கட்கிழமை வழக்கம் போல நியூட்ரிசன் சென்டருக்கு பழனியம்மாள் என்ற பெண்மணி வந்து பார்த்த போது உடல் முழுவதும் பலத்த வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் ராஜேந்திரன் சடலமாககிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து அவர் சங்ககிரி காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் ராஜேந்திரனின் சொத்து பிரச்சனை காரணமாக அவரது மனைவி மற்றும் மகன் கூலிப்படையை ஏவி கொலை கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அவரது மனைவி ,மகன் உட்பட எட்டு பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் பணம் வாங்கிக்கொண்டு கொடூர கொலை செய்த கூலிப்படையை சேர்ந்த லோகேஷ் (21), சசிகுமார் (22) ஆகியோர் மீது மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கௌதம் கோயல் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி உத்தரவின் பெயரிலும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர் இதற்கான உத்தரவை சிறையில் உள்ள இருவருக்கும் வழங்கப்பட்டது மேலும் இருவரின் உறவினர்களுக்கும் தகவல் வழங்கப்பட்டது கூலிப்படையைச் சேர்ந்த கொலை குற்றவாளிகளுக்கு குண்டர் சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்த இச்சம்பவம் சங்ககிரி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.