மோகன பிரியன் (19), அம்பேத்கர் காலனி இனாம் பைரோஜி ஆட்டையாம்பட்டி
சேர்ந்தவர் , கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு சேலம் கோரிமேட்டில் உள்ள ஐடிஐயில் படித்து முடித்துவிட்டு தற்போது வேலை ஏதும் செய்யாமல் இருந்து வந்துள்ளார்
இந்நிலையில்
கடந்த மூன்று மாதம் முன்பு இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கமான
சூர்யா (வயது 20 )
எம்ஜிஆர் நகர் மின்னாம்பள்ளி
சேலம்,
என்ற சேலம் பெண்கள் மகளிர் கலை கல்லூரியில் பிஎஸ்சி பாட்டனி மூன்றாம் ஆண்டு படித்து வரும் மாணவியை , காதலித்து வந்துள்ளார். தினமும் அரசு பஸ்ஸில் வீட்டில் இருந்து பழைய பஸ் நிலையம் வந்து அங்கிருந்து கல்லூரிக்கு செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில் கடந்த இரண்டு வார காலமாக கல்லூரி மாணவி மேற்கண்ட மாணவனிடம் சரிவர பேசாமல் புறக்கணித்து வந்துள்ளார். மாணவியின் உறவினர் கார்த்திக் என்பவருக்கு திருமணம் செய்ய பெண்ணின் தரப்பினர் முடிவு செய்து இருப்பது மேற்கண்ட எதிரிக்குத் தெரிந்த காரணத்தினால், இன்று காலை சுமார் எட்டு மணி அளவில் மாணவி சூர்யாவை கத்தியால் கழுத்தை அறுத்தும் வயிற்றில் குத்தியும் கை வலது கையில் வெட்டு காயமும் ஏற்படுத்திவிட்டு, தன்னைத்தானே கழுத்தை அறுத்துக் கொண்டும் தனது இடது கையில் நரம்பை அறுத்துக் கொண்டு உள்ளார். இருவருக்கும் தற்போது அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது .
மேலும் நகர காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் உதவி காவல் ஆணையாளர் அவர்கள் மருத்துவமனையில் உடனிருந்து விசாரணை செய்து வருகிறார்கள் .
மேலும் இருவரின் உயிருக்கு ஆபத்து ஏதும் இல்லை என்று மருத்துவர்கள் தற்போது தெரிவித்துள்ளனர்.