ஆனைமலை புலிகள் காப்பக – மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இயற்கை எழில் வாய்ந்த ஆழியாறு அணை அமைந்துள்ளது.இதனை ஒட்டி உள்ள வனப்பகுதியில் பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகள் உள்ளன.இந்நிலையில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து பெய்து வருவதால் பொள்ளாச்சி, ஆனைமலை ,ஆழியாறு, வால்பாறை உள்ளிட்ட இடங்களில் குளிர்ந்த சூழல் நிலவுகிறது.
இதனால் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரமே ஏசி போட்டது போல குளிர்ச்சியாக உணரப்படுகிறது.இந்நிலையில் ஆழியாறு – வால்பாறை சாலையில் உலா வரும் ஒற்றை காட்டு யானையான ஊசி கொம்பன் ஆழியார் அணைப்பகுதியில் ஜாலியாக உலா வருகிறது.120 அடி கொள்ளளவு கொண்ட ஆழியார் அணையின் நீர்மட்டம் நேற்று 100 அடியை எட்டி தொடர்ந்து அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.மேலும் அவ்வப்போது ஆழியாறு அணைப்பகுதியிலும், ஆழியாறு நீர் பிடிப்பு பகுதியிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.இதற்கிடையே ஆழியாறு பகுதிகளில் சுற்றித்திரிந்த ஒற்றைக் காட்டு யானை ஊசிக்கொம்பன் களைத்துப் போய் ரிலாக்ஸ் செய்வதற்காக ஆழியாறு அணையில் நிதானமாக இறங்கி, மூழ்கி குளிர்ந்த சூழ்நிலையிலும் ஆனந்தமாக குளித்தது.நின்று நிதானமாக சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக காட்டு யானை குளித்ததை, அங்கு வந்த சுற்றுலாப் பயணிகள் வீடியோ பதிவு செய்தும், செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.தற்போது ஆழியாறு – வால்பாறை சாலையில் ஒற்றை காட்டு யானை உலா வருவதால் பாதுகாப்பு கருதி, வனத்துறையினர் சுற்றுலாப் பயணிகளை நிகழ்விடத்தில் இருந்து அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டனர்.மேலும் சுற்றுலா பயணிகள் வனப்பாதையை கவனமாக கடக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்
100 அடியை எட்டிய ஆழியாறு அணையில் நிதானமாக ரிலாக்ஸ் செய்தது
