கோவை மாவட்டம் பொள்ளாச்சி பேருந்து நிலையத்திலிருந்து கிராமப்புறங்களுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் இயங்கி வருகின்றன.

இந்த நிலையில் பொள்ளாச்சி- மீனாட்சிபுரம் வழித்தட எண் 36 பேருந்து பதிவு எண் TN38 N 2757 பொள்ளாச்சியில் இருந்து அம்பராம்பாளையம் வழியாக மீனாட்சிபுரம் செல்கின்றது. இந்த பேருந்தில் காலை மற்றும் மாலை நேரங்களில் மீனாட்சிபுரம், வளந்தாயமரம், அம்பராம்பாளையம் ஆகிய பகுதிகளில் இருந்து பள்ளி மாணவர்கள் பொள்ளாச்சி வருவதற்கு அதிக அளவில் பயன்படுத்துகின்றனர்.

தற்போது பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில் தென்மேற்கு பருவமழை அதிகளவில் பெய்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் பேருந்தின் பின்பகுதியில் உள்ள கண்ணாடி மற்றும் பக்கவாட்டில் உள்ள கண்ணாடிகள், இருக்கைகள் அனைத்தும் கயிற்றால் கட்டப்பட்டு எப்போது வேண்டுமானாலும் விழுகும் நிலையில் பள்ளி மாணவர்களை ஏற்றி செல்கின்றனர்.

இந்த நிலையில் வழித்தடத்தில் இயக்க வேண்டாம் என அந்த பேருந்தில் பயணித்த பயணி பேருந்து நிலையினை எடுத்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.