திருவள்ளூர் அருகே போலீஸ் எனக்கூறி ரயில் பயணியை மிரட்டி செல்போன் வழிப்பறி செய்த வழிபறிக் கொள்ளையனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்,

திருவள்ளூர் மாவட்டம் புட்லூர் ரயில் நிலையத்தில் நேற்று இரவு ரயிலுக்காக காத்திருந்த பயணியிடம் ஒருவர் போலீஸ் எனக்கூறி உங்களை விசாரணை செய்ய வேண்டும் எனக்கூறி அவரிடம் இருந்து செல்போன் பறித்து இருசக்கர வாகனத்தில் அமர வைத்து காவல் நிலையத்துக்கு செல்வதாக அழைத்து சென்றுள்ளார்,
அப்போது அவ்வழியாக இரவு வாகன
சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசாரை கண்டு அந்த நபர் இருசக்கர வாகனத்தை
அங்கே நிறுத்திவிட்டு தப்பி ஓடி உள்ளார்
பின்னர் திருவள்ளூர் தாலுகா போலீசார் அவரை துரத்தி பிடித்ததில் வலது கால் முறிவு ஏற்பட்டதை தொடர்ந்து அவரை திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை முடிந்த பின்,
காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில் அந்த நபர் திருவள்ளூர் அடுத்த பழைய திருப்பாச்சூர் பகுதியைச் சேர்ந்த வழிபறிக் கொள்ளையன் செல்வகுமார் -34 என்பது
தெரியவந்தது
அவர் கடந்த 2024 செப்டம்பர் மாதம் பட்டரைப்பெரும்புந்தூர் சுங்கச்சாவடியில் ஆம்புலன்ஸ் ஓட்டுனரின் செல்போன் தங்க செயினை திருடிய வழக்கில் தலைமறைவாக இருந்து வந்தது போலீசார் விசாரணையில் தெரியவந்தது
அவர் மீது திருவள்ளூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள காவல் நிலையங்களில் நான்குக்கு மேற்பட்ட வழிபறி வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது,
அதைத் தொடர்ந்து அவரிடம் புட்லூர் ரயில் நிலையத்தில் ரயில் பயணியிடம் வழிப்பறி செய்த செல்போனை பறிமுதல் செய்தும் அவரை திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்,
புட்லூர் ரயில் நிலையத்தில் போலீஸ் எனக் கூறி ரயில் பயணியிடம் செல்போன் வழிப்பறி செய்த வழக்கில் வழிபறிக் கொள்ளையனை போலீசார் துரத்தி சென்று கைது செய்து சிறையில் அடைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது,
