பொடாரன் நிறுவனத்தின் டிலோ குளிர்பான பாட்டில்களை போலியாக தயாரித்த ஐந்து நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ள நிலையில் தரமான பொருட்களை பார்த்து வாங்கிக் கொள்ளுமாறு பொதுமக்களுக்கு பொடாரன் நிறுவனத்தினர் கோரிக்கை.
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே பொடாரன் ஃபுட்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. கடந்த 56 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் இந்த நிறுவனம் கேரளா ஆந்திரா மகாராஷ்டிரா என பல்வேறு மாநிலங்களிலும் குளிர்பானங்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது இந்நிலையில் இந்த நிறுவனத்தின் குறைந்த விலை தயாரிப்பான டிலோ குளிர்பானங்கள் பத்து ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் நிலையில் ஏராளமான மக்களால் வாங்கி உபயோகிக்கப்படுகிறது.
இந்த வகை குளிர்பானத்தை போலியாக தயாரித்து பெயரில் லேசான மாற்றங்களை மட்டும் செய்து உணவு கட்டுப்பாட்டு தரச் சான்றிதழ் எதுவும் பெறாமல் விற்பனை செய்யப்படுவதாக பொடாரன் நிறுவனத்தினர் கொடுத்த புகாரின் பேரில் அறிவு சார் சொத்துரிமை அமலாக்க பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து திண்டுக்கல் கோவை சேலம் ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் இயங்கி வந்த ஐந்து நிறுவனங்களை கண்டறிந்து நிறுவனங்கள் மீது சீல் வைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து திருப்பூர் தனியார் அரங்கில் செய்தியாளர்களை சந்தித்த பொடாரன் நிறுவனத்தினர் கூறுகையில் போலியான நிறுவனங்கள் எந்த விதமான உணவு கட்டுப்பாட்டு தரச் சான்றிதழ் இன்றி குளிர்பானங்களை விற்பனை செய்வது பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்பதால் பொடாரன் நிறுவனம் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் பொதுமக்களும் சரியான நிறுவன பொருட்களை வாங்கி பயன்படுத்த வேண்டும் எனவும் பொடாரன் நிறுவனத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பேட்டி சுரேஷ்நாகராஜ்.
பொடாரன் நிறுவன செய்தி தொடர்பாளர்
