பாட்டாளி மக்கள் கட்சியில் அன்புமணி ராமாதாசுக்கும் ராமதாசுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிற நிலையில் கட்சி தொண்டர்கள் என்ன செய்வதென்று குழப்பில் உள்ள நிலையில் திண்டிவனம் அருகேயுள்ள வைரபுரம் கிராமத்தில் உள்ள பாமக ஒன்றிய விவசாய அணி செயலாளர் வீரசாமி தலைமையில் 20-க்கும் மேற்பட்டோரும் அ ம முக இலக்கிய அணி ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன் தலைமையில் 20 பேர் என 40 க்கும் மேற்பட்டோர் பாமக அமுமுக கட்சியில் இருந்து விலகி சிவி சண்முகம் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். திண்டிவனத்தில் உள்ள முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் இல்லத்தில் இணைந்தவர்களுக்கு சிவி சண்முகம் கட்சி முன்னிலையில் இணைந்தவர்களுக்கு அதிமுக கட்சி துண்டினை போர்த்தி சிவி சண்முகம் வரவேற்றார். இந்த நிகழ்வில் வானூர் சட்டமன்ற உறுப்பினர் சக்கரபாணி ஒலக்கூர் மேற்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
