திருப்பூர்: மளிகை கடைகாரரின் மகன் 599, பழைய இரும்பு வியாபாரம் செய்பவரின் மகன் 598, பனியன் நிறுவன உரிமையாளர் மகள் 597 என அடுத்தடுத்த மதிப்பெண்கள் பெற்று மாணவர்கள் சாதனை.
தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுகள் நிறைவடைந்து இன்று தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது இதில் திருப்பூர் மாவட்டம் அதிகளவிலான தேர்ச்சி சதவிகிதத்தை பெற்று தமிழகத்தில் மூன்றாவது இடத்தை பெற்றுள்ளது. குறிப்பாக திருப்பூரைச் சேர்ந்த மாணவர்கள் அதிகளவிலான மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர். 600 மதிப்பெண்களுக்கு 599 மதிப்பெண்கள் 598 மதிப்பெண்கள் 597 மதிப்பெண்கள் என அடுத்தடுத்ததாக பெற்று திருப்பூர் மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்
அதன்படி திருப்பூர் பல்லடம் அடுத்த புத்தரச்சல் பகுதியைச் சேர்ந்த சிதம்பரம் என்ற மளிகை கடைகாரரின் மகன் ராகுல் ஆங்கிலத்தில் மட்டும் 99 மதிப்பெண்களும் மற்ற ஐந்து பாடங்களில் 100 மதிப்பெண்கள் என 599 மதிப்பெண்கள் பெற்று சாதனை தேர்ச்சி பெற்றுள்ளார். அதே போல திருப்பூர் கரட்டாங்காடு பகுதியைச் சேர்ந்த பழைய இரும்பு வியாபாரம் செய்யும் சுரேஷ்குமார் என்பவரது மகன் ருத்ர மூர்த்தி 598 மதிப்பெண்கள் பெற்றுள்ளார் இவர் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தலா 99 மதிப்பெண்களும் மற்ற பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளார். அதேபோல ராதாகிருஷ்ணன் என்ற பனியன் நிறுவன உரிமையாளர் மகள் கோதை காமாட்சி 597 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்
இவர் தமிழில் 99 மதிப்பெண்களும் ஆங்கிலத்தில் 98 மதிப்பெண்களும் மற்ற பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்களும் பெற்று 597 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளார் திருப்பூர் மாவட்டத்தில் அதிக தேர்ச்சி சதவிகிதம் பெற்றது மட்டுமின்றி மாணவர்கள் அதிக அளவிலான மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றதும் திருப்பூர் மாவட்ட மக்கள் மற்றும் பெற்றோர்கள் பயிற்றுவித்த ஆசிரியர்கள் என அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பேட்டி-ருத்ர குமார் -598 மதிப்பெண் பெற்ற மாணவர்.
பேட்டி-ஷர்மிளா-தனியார் பள்ளியின் தாளாளர்
