மேட்டுப்பாளையம் பில்லூர் அணை இரண்டாவது நாளாக வினாடிக்கு 13 ஆயிரத்து 425 கன அடி தண்ணீர் பவானி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்கிறது
கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது குறிப்பாக பில்லூர் அணை நீர் பிடிப்பு பகுதிகளான அமைதி பள்ளத்தாக்கு சிறுவாணி மலைப்பகுதியில் அதிகமான மழை பெய்து வருகிறது இதன் காரணமாக பில்லூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அணை நிரம்பியது 100 அடி கொள்ளளவு கொண்ட இந்த அனைத்து 97 அடியை எட்டியவுடன் அணையின் பாதுகாப்பு கருதி மேல் மதகுகள் வழியாக உபரி நீர் பவானி ஆற்றில் திறந்து விடப்பட்டு கொண்டிருக்கிறது இதன் காரணமாக காரமடை மேட்டுப்பாளையம் சிறுமுகை உள்ளிட்ட கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது
தொடர் மழை காரணமாக பில்லூர் அணை நிறைந்து உபரி நீர் திறந்து விடப்பட்டதால் பவானி ஆற்றில் செல்லக்கூடிய இந்த தண்ணீர் முழுமையாக பவானிசாகர் அணைக்கு சென்று சேர்கிறது இதன் காரணமாக பவானிசாகர் அணையின் நீர்மட்டமும் ஒரே நாளில் மூன்று அடி உயர்ந்துள்ளது.
