இரண்டு டூவீலர்கள் மோதல், நெஞ்சை பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள், போலீசார் விசாரணை.

பரமக்குடியில் இரண்டு டூவீலர்கள் ஒன்றோடு ஒன்றாக மோதிக் கொள்ளும் சிசிடிவி காட்சிகள் நெஞ்சை பதற வைக்கும் விதமாக உள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஓட்டப்பலம் என்ற இடத்தில் பெண் ஒருவர் தனது இரண்டு குழந்தைகளுடன் டூவிலரில் சாலையில் சென்று கொண்டிருந்தார். வலது புறமாக திரும்ப முயன்ற போது பின்னால் அதிவேகமாக வந்த டூவீலர் மோதியதில் இரண்டு டூவீலரில் வந்து சென்றவர்களும் சாலையில் தூக்கி வீசப்படுகின்றனர்.

இந்த விபத்து அருகில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. காயம்படைந்த அந்த பெண் பரமக்குடி அரசு மருத்துவமனைவி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கோடை விடுமுறையில் பள்ளிகள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையிலும் தனது குழந்தைகளை கோடைகால பயிற்சிக்கு தனியார் நர்சரி பள்ளிக்கு அழைத்துச் சென்றபோது விபத்து ஏற்பட்டதாக சம்பவ இடத்தில் இருந்தவர்கள் தெரிவித்தனர். விபத்து குறித்து பரமக்குடி போலீஸ் விசாரணை செய்து வருகின்றனர்.