சர்வதேச யோகா தினம் ஜூன் மாதம் 21ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருப்பூரில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் யோகா தினம் திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிபதி.குணசேகரன் தலைமையில் நடைபெற்றது. இந்த யோகா நிகழ்ச்சியில் வேதாந்திரி மகரிஷி மனவளக்கலை மன்றத்தின் சார்பில் நீதிபதிகள் வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்ற பணியாளர்களுக்கு மூச்சு பயிற்சி, உடற்பயிற்சிகள், மன அழுத்தத்தை குறைக்கும் பயிற்சிகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர். மோகனவள்ளி, திருப்பூர் தலைமை அரசு மருத்துவ கல்லூரியின் யோகா மருத்துவர்.திவான் மைதீன் மற்றும் நீதிமன்றத்தின் நீதிபதிகளும் வழக்கறிஞர்களும் நீதிமன்ற பணியாளர்களும் என ஏராளமானோர் கலந்து கொண்டு யோகா பயிற்சியில் ஈடுபட்டனர்.
திருப்பூரில் 11 வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நீதிமன்ற வளாகத்தில் நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் சார்பில் யோகா தினம் கொண்டாடப்பட்டது.
