
உலக செவிலியர்கள் தினத்தை முன்னிட்டு கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவிலியர்கள் கேக் வெட்டியும், கலை நிகழ்ச்சிகளுடன் உற்சாகமாக கொண்டாடினர்.

ஒவ்வொரு ஆண்டும் மே.12 ஆம் தேதி உலக செவிலியர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு உலக செவிலியர்கள் தினத்தை முன்னிட்டு கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி வரும் சுமார் 300க்கும் மேற்பட்ட செவிலியர்கள் கேக் வெட்டியும், ஆடல், பாடல் என உற்சாகமாக கொண்டாடினர். மேலும் செவிலியர்களுக்கான ஓவியப் போட்டி, கோலப்போட்டிகள், முக ஓவியம் நிகழ்வுகள் ஆகியவை நடத்தப்பட்டது. தொடர்ந்து செவிலியர்கள் மெழுகு வர்த்தியை கையில் ஏந்தி, பாகுபாடு இன்றி அனைத்து மக்களுக்கும் பணியாற்ற வேண்டும் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் செவிலியர்களின் குழந்தைகள், கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் நிர்மலா மற்றும் அனைத்து துறை மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் செவிலியர்கள் மற்றும் அவர்களது குழந்தைகள் உற்சாகமாக நடனமாடினர்.
இது குறித்து பேசிய செவிலியர் தாரகேஷ்வரி கூறும் போது : நைட்டிங்கேல் அம்மையார் பிறந்தநாளை முன்னிட்டு செவிலியர் தினமாக கொண்டாடி வருகிறோம். இன்று அவரது பணிகள், சேவைகளை மக்களிடம் நடந்து கொள்ளும் விதம் உள்ளிட்டவை நினைவு கூறுகிறோம். மேலும் செவிலியர்கள், செவிலியர் கண்காணிப்பாளர்கள், பயிற்சி மாணவிகள் என அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டனர்.
மேலும் செவிலியர்கள் அவரது குழந்தைகளுக்கான விளையாட்டு போட்டிகள் நடந்தது. ஓய்வு இல்லாமல் 24 மணி நேரமும் பணியாற்றும் செவிலியர்கள் இந்த ஒரு நாள் கொண்டாடத்துடன் பணியும் செய்கிறோம். ஒவ்வொரு ஆண்டு ஒவ்வொரு கருவுடன் செவிலியர்கள் தினம் கொண்டாடப்படும் நிலையில் இந்த ஆண்டு செவிலியர்கள் சேவை, மற்றும் பாதுகாப்பு கருவை கொண்டு கொண்டாடப்பட்டது என தெரிவித்தார்.
