ஆடி அமா வாசையில் தங்களுடைய முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தால் அது அவர்களை சென்றடைகிறது என்பது ஐதீகம். அதன்படி ஆடி அமாவாசையான இன்று மேட்டூர் அணையின் அடிவாரம் காவிரி ஆற்றின் படித்துறை, எம்.ஜி.ஆர், பாலம் படித்துறை பகுதிகளில் இன்று அதிகாலை முதலே ஒமலுர், ஜலகண்டாபுரம், மேச்சேரி, நங்கவள்ளியை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வந்திருந்தனர். அவர்கள் புரோகிதர்களைக் கொண்டு வேத மந்திரங்களை ஓதினர். பின்னர்
தங்களது மூதாதையர்களின் பெயரை கூறி, பச்சரிசி மாவு, எள், வாழைப்பழம் உள்பட பல்வேறு பொருட்களை படையலிட்டு வழிபாடு நடத்தினார்கள். தர்ப்பண பொருட்களை ஆற்றில் கரைத்து, புனித நீராடி முன்னோர்களை வழிபட்டனர்.
மேட்டூர் காவிரி ஆற்றில் ஆடி அமாவாசையை முன்னிட்டு பொதுமக்கள் தங்சளது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.
