மதுராந்தகத்தில் நகராட்சிக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பை அகற்ற வந்த நகராட்சி ஊழியர்களுக்கு பாதுகாப்பு வழங்க வந்த காவல் ஆய்வாளருக்கும் வழக்கறிஞருக்கும் தள்ளுமுள்ளால் பரபரப்பு

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் நகராட்சிக்குட்பட்ட பழைய தாலுகா அலுவலகம் இடத்தில் புதிதாக அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனை கட்டி முடித்துள்ளனர்

இதற்குச் செல்லும் 40 அடி சாலையை சில நபர்கள் ஆக்கிரமிப்பு செய்து இருந்தனர் இதை அகற்ற நகராட்சி நிர்வாகம் பல முறை நோட்டீஸ் வழங்கியுள்ளது
அவர்கள் கட்டியுள்ள கட்டிடங்களை அகற்றக் கூறி

இந்த கட்டிடங்கள் சில வழக்கறிஞர்கள் அலுவலகமாக வைத்துள்ளனர்

இன்று நகராட்சி ஆணையர் மற்றும் ஊழியர்கள் மதுராந்தகம் காவல் ஆய்வாளர் தலைமையில் 50க்கும் காவலர்களை வைத்துக்கொண்டு

இந்த பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றினர்

இதனால் நகராட்சி ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த வந்த ஆய்வாளருக்கும் வழக்கறிஞர் ஒருவருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது

இதனால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

பின்பு நகராட்சி ஆணையரிடம் ஆக்கிரமிப்பாளர்கள் அகற்றுவதற்கு கூடுதலாக15 நாட்கள் அவகாசம் வழங்க வேண்டும் அதுபோல எங்களுக்கு முறையாக அளவிடு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமென கூறினார்கள்.