மதுரை மாட்டுத்தாவணி பழ மார்க்கெட்டில் பணியாற்றி வந்த இளைஞர் கொலை
மதுரை மாநகர் செல்லூர் பகுதியை சேர்ந்த தங்கபாண்டி என்ற இளைஞர் மாட்டுத்தாவணி பகுதியில் உள்ள பழ மார்க்கெட்டில் உள்ள கடை ஒன்றில் பணியாற்றிவருகிறார். நேற்று இரவு பணிக்காக தங்கபாண்டி மார்க்கெட்டிற்கு வந்துள்ளார். அப்போது அங்கு வந்த 5 பேர் கொண்ட கும்பல் தங்கபாண்டியிடம் வாக்குவாதம் செய்த அந்த கும்பலானது தாங்கள் பதுக்கி வைத்திருந்த கத்தியால் வயிற்றில் சரமாரியாக குத்தியுள்ளனர். இதில் கீழே விழுந்த தங்கபாண்டியை கத்தியால் குத்தி கொலை செய்தனர்
. இதையடுத்து காவல்துறையினருக்கு அளித்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த மாட்டுத்தாவணி காவல்துறையினர் உடலை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக அனுப்பிவைத்தனர். பின்னர் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி ஆதாரங்களை கைப்பற்றி சென்றனர்
காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தங்கபாண்டிக்கும் கொலை செய்ய வந்த கும்பலுக்கும் முன் விரோதம் காரணமாக கொலை நடைபெற்று இருக்கலாம் என தெரியவந்துள்ளது.
