குஜராத் மாநிலத்தில் இருந்து தமிழகம் நெல்லைக்கு ஜாம்நகர் எக்ஸ்பிரஸ் ரயில் கடந்த 13 ஆம் தேதி இரவு ஆயிரக்கணக்கான பயணிகளுடன் புறப்பட்டது.இந்த ரயில் நேற்று மாலை 5:30 மணிக்கு நெல்லை வந்தடைய வேண்டும். ஆனால் நேற்று காலை மங்களூர் மற்றும் உடுப்பி இரண்டு பகுதிகளுக்கும் இடையே திடீரென மண் சரிவு ஏற்பட்டு ரயில் தண்டவாளங்களில் மண் கற்கள் விழுந்துள்ளது.இதனால் ஜாம்நகர் எக்ஸ்பிரஸ் ரயில் மங்களூர் பகுதியில் தண்டவாளத்தில் 5 மணி நேரமாக நகராமல் நின்று கொண்டிருக்கிறது.அதில் நெல்லையை சேர்ந்த ஏராளமான பயணிகள் பயணித்து வருகின்றனர். அவர்கள் தொடர்ந்து ரயில்வே நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளனர்.