குமரி மாவட்டம் குமரிமுனை சுற்றுலா தலத்தில் அமைந்துள்ள அரசு விருந்தினர் மாளிகை, கேரளா அரசு விருந்தினர் மாளிகை மற்றும் கோவளம் கடற்கரை பகுதிகளில் ஏராளமான மயில்கள் காணப்படும்.இந்நிலையில் தமிழ்நாடு அரசு விருந்தினர் மாளிகை பகுதியில் வானில் கார்மேகம் சூழ்ந்துள்ளதை கண்ட ஆனந்ததுடன் மயில் ஒன்று தனது வண்ண, வண்ண தோகையை விரித்து ஆடியது. இந்த அழகிய காட்சியை கண்ட குமரிக்கு வந்த சுற்றுலா பயணிகள் பரவசம் அடைந்ததோடு மயில் தோகை விரித்து ஆடும் காட்சியை புகைப்படங்கள், விடியோ எடுத்து சென்றார்கள்.
குமரி மாவட்டம் குமரி சுற்றுலா தலத்தில் தமிழ்நாடு அரசினர் விருந்தினர் மாளிகை வளாகத்தில் வானில் ஏற்பட்ட கார்மேகத்தை கண்டு ஆனந்ததுடன் மயில் ஒன்று தனது தோகையை விரித்து ஆடியது. இந்த அழகிய காட்சியை கண்ட சுற்றுலா பயணிகள் பரவசம் அடைந்ததோடு புகைப்படங்கள் விடியோ எடுத்து சென்றார்கள்.
