கிருஷ்ணகிரி மாவட்டம் மற்றும் கர்நாடக மாநிலம் தென்பெண்ணை ஆற்று நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.கே.ஆர்.பி. அணைக்கு நீர் வரத்து நேற்று வினாடிக்கு 376 கன அடியாக இருந்த நிலையில் இன்று 943 கன அடியாக உயர்ந்துள்ளது. அணையின் முழு கொள்ளவான 52 அடியில், ஏற்கனவே அணையின் நீர் மட்டம் 51.00 அடியை எட்டியுள்ளதால் அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே தென்பெண்ணை ஆற்றில்திறக்கப்பட்டுள்ளது. அணையில் இருந்து நீர் வெளியேற்றம் நேற்று 183 கன அடியாக இருந்த நிலையில் இன்று 1072 கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாக கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை ஆகிய மூன்று மாவட்டத்தின் தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எக்காரணத்தை கொண்டும் ஆற்றை கடக்கவோ, குளிக்கவோ கூடாது எனவும் பொதுப்பணிதுறை அதிகரிகள் எச்சரித்துள்ளனர்.