சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கோட்டையூரில் உள்ள கோட்டையூரின் காவல் தெய்வமான பிரசித்தி பெற்ற ஸ்ரீ கற்பக விநாயகர், ஸ்ரீ கோட்டை நாச்சியம்மன் கோவில் திருப்பணிகள் நிறைவடைந்து இன்று கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது, கடந்த 6ம் தேதி கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் ஆரம்பிக்கப்பட்டு, வெள்ளிக்கிழமை முதல் கால மற்றும் இரண்டாம் கால பூஜைகளை தொடர்ந்து இன்று காலை ஆறாம் காலை பூஜைய மூலஸ்தான அபிஷேகம் மகாபூர்ணா ஹுதி ,தீபாராதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பிள்ளையார்பட்டி ஸ்ரீ பிச்சை குருக்கள் தலைமையில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க யாக சாலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட கும்பாபிஷேக புனித நீர் குடங்கள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு ஸ்ரீ கற்பக விநாயகர் ஸ்ரீ கோட்டை நாச்சியம்மன் கோபுர கலசங்களுக்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.
காரைக்குடி, கோட்டையூர் வேலங்குடி கண்டனூர் அழகாபுரி உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளிலிருந்து பலாயிரக்கணக்கான பக்தர்கள் கும்பாபிஷேக நிகழ்ச்சியில் பங்கேற்று தரிசனம் செய்தனர்
