கொடைக்கானலில் காட்டெருமைக்கு கத்திரிக்காய் ஊட்டிய இருவருக்கு வனத்துறையினர் அபராதம்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் தொடர்ந்து பல்வேறு வனவிலங்குகளின் படையெடுப்பு அதிகரித்து வரக்கூடிய நிலையில் கொடைக்கானலில் உள்ள தனியார் விடுதி உள்ள சமையலறையில் இருந்து காட்டெருமைக்கு கத்திரிக்காய் மற்றும் தண்ணீர் ஊற்றியது போன்ற வீடியோ எடுத்து அதனை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றியது வைரலான நிலையில் அந்த பகுதி எங்கு உள்ளது என்று வனத்துறையினர் தீவிர சோதனை இட்ட பிறகு கொடைக்கானலில் உள்ள ஒரு தனி அறு விடுதி அருகே இருக்கக்கூடிய சமையல் அறையில் இந்த சம்பவம் நடந்தது தெரிய வந்தது சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர் காட்டெருமைக்கு கத்திரிக்காய் ஊட்டிய இருவருக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதமாக விதித்து மேலும் இது போன்ற செயல்களை ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.