கொடைக்கானலில் நேற்று தொடர்ந்து 2 மணி நேரத்திற்கு மேலாக கொட்டி தீர்த்த கனமழை காரணமாக இன்று காலையில் பண்ணைக்காட்டில் இருந்து தாண்டிக்குடி செல்லக்கூடிய சாலையில் ராட்சச மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடந்த மூன்று நாட்களாக கோடை மழை அவ்வப்போது பெய்து வருகிறது இந்நிலையில் நேற்று கொடைக்கானல் நகர் பகுதிகள் மட்டுமல்லது கொடைக்கானலை சுற்றி உள்ள மலை கிராமங்களிலும் கனமழை பெய்தது குறிப்பாக தாண்டி குடிப்பகுதியில் சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக கன மழை கொட்டி தீர்த்தது

மேலும் கனமழை காரணமாக இன்று காலையில் சுமார் 9 மணி அளவில் பண்ணைக்காட்டில் இருந்து தாண்டிக்குடி பெரும்பாரை கேசி பட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லக்கூடிய பிரதான மலை சாலையில் ராட்சச மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்படைந்தது இதனை தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் மற்றும் அப்போது மக்கள் ராட்சச மரத்தை இயந்திரம் கொண்டு அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர் தொடர்ந்து கோடை மழை கனமழையாக பெய்தால் மழை சாலையில் உள்ள ஆபத்தான மரங்களை அகற்ற வேண்டும் என்று கோரிக்கையில் எழுந்துள்ளது.