கரூர் மாவட்டம் க. பரமத்தி மிகவும் வறண்ட பகுதி என்பதால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் ஆடுகளை வளர்ப்பது பிரதான தொழிலாக உள்ளது. இந்த நிலையில் க.பரமத்தி அருகே தனியாச்சலம் என்பவர் சுமார் 55க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகிறார். இரவு நேரத்தில் ஆடுகளைப் பட்டியில் அடைத்துவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இந்த நிலையில் நள்ளிரவு நேரத்தில் ஆடு மற்றும் ஆட்டுக்குட்டிகளை தெரு நாய்கள் 20-க்கும் மேற்பட்ட ஆடுகளை கடித்து குதறி உள்ளது. இதில் 10-க்கும் மேற்பட்ட ஆடுகள் உயிரிழந்துள்ளது. அரசு உடனடியாக நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், உயிரிழந்த ஆட்டிற்கு நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பாக நேற்று அதே பகுதியில் 15க்கும் மேற்பட்ட ஆடுகள் நாய்கள் கடித்து உயிரிழந்த நிலையில் இன்று 10-க்கும் மேற்பட்ட ஆடுகள் உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.