காரைக்குடி
ஒயரிங் பழுது காரைக்குடி அருகே முகப்பு விளக்கு எரியாததால் நடுவழியில் நின்ற அரசு பேருந்து –
மாற்று பேருந்து மூலம் சென்ற பயணிகள்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இருந்து புதுவயல், அறந்தாங்கி வழியாக பட்டுக்கோட்டைக்கு அரசு பேருந்து சென்றது 40க்கு மேற்பட்ட பயணிகளுடன் சென்ற அரசு பேருந்து புதுவயல் அருகே சென்ற போது இருக்கைகளில் உள்ள விளக்குகள் பேட்டரியில் இருந்து செல்லும் மின் வயரில் பழுது காரணமாக சரிவர எரியவில்லை மேலும் பேருந்தின் முகப்பு விளக்கும் எரியாததால் தொடர்ந்து பேருந்தை இயக்க முடியாத நிலை ஏற்பட்டது
ஓட்டுநர் பேருந்தை புதுவயல் பேருந்து நிறுத்தம் அருகே நிறுத்தி விளக்குகள் எரிய வைக்கும் முயற்சியில் ஓட்டுனரும் நடத்துனரும் நீண்ட நேரம் ஈடுபட்டனர் முயற்சி பலன் அளிக்காததால் பேருந்தில் பயணம் செய்த பயணிகளை அவ்வழியாக சென்ற மாற்று பேருந்து மூலம் அனுப்பி வைத்தனர். அரசு பேருந்து முகப்பு விளக்கு எரியாதததால் நடுவழியில் இறங்கிய பயணிகள் அவதி அடைந்தனர்.முக்கிய வழித்தடங்களில் பழுதான பேருந்துகளை இயக்காமல் புதிய பேருந்துகளை இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்
