இலங்கை கடற்படையினர் காரைக்கால் மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி கைது செய்ததை கண்டித்து ஐந்து நாட்கள் வேலை நிறுத்த போராட்டம் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில்
இன்று மீன் பிடி துறைமுகத்தில் மீனவர்கள் சிறையில் இருக்கும் மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்காத ஒன்றிய அரசு மற்றும் புதுச்சேரி மாநில அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பி மீன்பிடி படகில் தேசிய கொடியை இறக்கி கருப்பு கொடி ஏற்றி போராட்டம்.

500க்கும் மேற்பட்ட விசைப்படகில் கருப்பு கொடி ஏற்றி துறைமுகத்தில் நிறுத்தி வைப்பு.தொடர்ந்து சாலை மறியல் ரயில் மறியலில் ஈடுபட போவதாக எச்சரிக்கை
வலுக்கும் காரைக்கால் மீனவர்கள் போராட்டம்.