குமரி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் நேற்று இரவு முதல் தற்பொழுது வரை விட்டு, விட்டு மழை பெய்து வருகிறது.இதனால் காளிகேசம், கீரிப்பாறை,வாழையத்து வயல் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள அரசு,தனியார் ரப்பர் தோட்டங்களில் ரப்பர் பால் வெட்டும் தொழில் நிறுத்தம். ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரப்பர் பால் வெட்டும் தொழிலாளர்கள் ரப்பர் பால் வெட்டுவதற்கு செல்லவில்லை.அவர்கள் வாழ்வாதாரம் பாதிப்பு.

குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே அனைத்து பகுதிகளிலும் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.குறிப்பாக கேரளா மாநிலத்தையொட்டி அமைந்துள்ள மேற்கு தொடர்ச்சி மலை கிராமங்களில் அதிக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் குமரி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் நேற்று இரவு ஆரம்பித்த மழையானது தற்பொழுது வரை விட்டு,விட்டு தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் காளிகேசம், கீரிப்பாறை,வாழையத்து வயல் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள அரசு,தனியார் ரப்பர் தோட்டங்களில் ரப்பர் பால் வெட்டும் தொழில் பாதிப்பு அடைந்துள்ளது.ரப்பர் பால் வெட்டும் தொழிலும் நிறுத்தப்பட்டுள்ளது.மேலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரப்பர் பால் வெட்டும் தொழிலாளர்கள் ரப்பர் பால் வெட்டுவதற்கு செல்லவில்லை. அவர்கள் வாழ்வாதாரம் பாதிப்பு அடைந்துள்ளது.