வருடத்தில் ஒருமுறை மட்டுமே பிரம்ம கமலம் பூக்கள் பூக்கின்றன. பிரம்ம கமலம் இரவில் பூத்து, காலையில் உதிரும். பிரம்ம கமலம் கள்ளிச் செடி வகையைச் சேர்ந்த தாவரமாகக் கருதப்படுகிறது. ஒரே செடியில் 10 க்கும் மேற்பட்ட பூக்கள் பூக்கக் கூடிய இவை, 5 முதல் 10 சென்டி மீட்டர் உயரம் வரை வளரக் கூடியவை. இந்தப் பூவானது, அதனைச் சுற்றி உள்ள பகுதி முழுவதும் தெய்வீக நறுமணம் கமழ வைக்கும் தன்மை கொண்டது.

பொதுவாக, பிரம்ம கமலம் உயரமான இடங்களில் வளரும் தாவரமாகும். உத்தரகாண்ட் மற்றும் இமயமலைப் பகுதிகளில் அதிகமாக செழித்து வளர்கின்றன. இந்தியாவின் பிற பகுதிகள், நேபாளம், பூடான் போன்ற பகுதிகளிலும் காணப்படுகிறது. இவை, பெரும்பாலும் ஜூலை முதல் ஆகஸ்ட் மாதங்களில் அதிகமாக மலருகின்றன.