விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே திருவிருந்தாள்புரம் கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரவேலு. விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு பூங்கொடி என்ற மனைவியும் ஜெயதுர்கா, ஜெயலட்சுமி என்ற இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் இன்று காலை நேரத்தில் விவசாயி சுந்தரவேலு தனது வீட்டில் தனது மனைவி பூங்கொடி மற்றும் ஜெயதுர்கா, ஜெயலட்சுமி இரண்டு குழந்தைகளையும் அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு தாலுகா காவல் நிலையத்தில் சரணடைந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த தாலுகா காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்து உயிரிழந்தவர்களின் உடலை கைப்பற்றிய அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர். மேலும் சம்பவ இடத்தில் மாவட்ட எஸ்பி கண்ணன் நேரில் விசாரணை மேற்கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
