கன்னியாகுமரி மாவட்டம் மாம்பழத்துறையாறு நீர் தேக்கம் அருகே சுமார் 500-ஏக்கர் விவசாய நிலங்களுக்கு நடுவே அமைந்துள்ளது வில்லுக்குறி பேரூராட்சியின் வளம் மீட்பு பூங்கா
இந்த பூங்காவிற்கு வில்லுக்குறி பேரூராட்சி சசுற்றுவட்டார பகுதிகளில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகள் கொண்டு வரப்பட்டு மட்கும் குப்பை மட்கா குப்பை என தரம் பிரிக்கப்பட்டு மறு சுழற்சிக்காக அனுப்பி வைக்கப்படுகிறது
கழிந்த மூன்று நாட்களாக தோட்டியோடு பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவமனையில் இருந்து மூட்டை மூட்டையாக பேரூராட்சி குப்பை வண்டியில் கொண்டு வரப்படும் மருத்துவ கழிவுகள் வளம் மீட்பு பூங்காவில் வைத்து இரவோடு இரவாக எரிக்கப்படுவதாகவும் விவசாய நிலங்களிலும் நீர் நிலைகளிலும் கொட்டப்படுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதோடு விவசாய நிலங்களும் பாதிக்கப்படுவதாக புகார்
பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும் என கடைகளை சோதனை செய்து அபராதம் விதிக்கும் வில்லுக்குறி பேரூராட்சி அதிகாரிகள் தனியார் மருத்துவமனைக்கு சட்டத்துக்கு புறம்பாக அரசு வாகனத்தை நேரடியாக அனுப்பி மருத்துவ கழிவுகளை சேகரித்து வந்து தீ வைத்து எரிப்பதோடு நீர் நிலைகளில் கொட்டி மாசுப்படுத்தி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தியுள்ளதாகவும் உடனடியாக அந்த மருத்துவ கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுப்பதோடு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்
இது குறித்து வில்லுக்குறி பேரூராட்சி செயல் அலுவலர் ராமு விடம் விளக்கம் கேட்ட போது தனியார் மருத்துவமனை நிர்வாகம் கேன்டீஸ் கழிவுகளை அகற்ற தங்களை அணுகியதாகவும் அதன் அடிப்படையில் அரசு குப்பை வண்டியில் கழிவுகளை சேகரித்து வந்ததாகவும் அதில் பிளாஸ்டிக் உள்ளிட்ட மருத்துவ கழிவுகள் இருந்ததால் மருத்துவமனை நிர்வாகத்திற்கு நோட்டீஸ் வழங்கியுள்ளதாகவும் மருத்துவ கழிவுகள் மற்றும் இன்னும் பிற கழிவுகளை மருத்துவமனையே பாதுகாப்பாக அகற்ற வேண்டும் என அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாகவும் விளக்கமளித்தார்.