காட்டாறுகளில் வெள்ளப்பெருக்கு குறிப்பாக வயநாடு பகுதியில் சூரல் மலை முண்டக்கை ஆகிய மலை பகுதிகளில் கன மழை பெய்த காரணத்தால் கடந்தாண்டு நிலச்சரிவு ஏற்படுத்திய புண்ணப்புழாவில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறதுவடக்கு கேரள பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது நீர் நிலைகள் வெள்ளம் கரை புரண்டு சாலைகளில் செல்வதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது வடக்கு கேரள பகுதிகளான கண்ணூர் காசர்கோடு கோழிக்கோடு வயநாடு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் கனமழை பெய்து வருவதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள் பலமான காற்று வீசுவதால் ஆங்காங்கே மரங்களும் முறிந்து வேரோடு சாய்ந்தும் விழுந்து வருகிறதுபருவமழை தீவிரமாக பெய்து வரக்கூடிய காரணத்தினால் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டி இருக்கக்கூடிய மாவட்டங்களில் சிறப்பு முகாம்கள் திறக்கப்பட்டு மக்கள் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர் எதிர்வரும் நாட்களில் மழை தொடரும் என்பதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்