பரமக்குடியில் நான்கு வழிச்சாலையில் தண்ணீர் கொண்டு சென்ற மினி லாரி தலைக்குப்புற கவிழ்நததில் டிரைவருக்கு லேசானம் காயம் ஏற்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே சுந்தனேந்தல் என்ற இடத்திலிருந்து தண்ணீர் ஏற்றிக்கொண்டு மினி லாரி பரமக்குடி நோக்கி சென்று கொண்டிருந்தது. மதுரை – ராமநாதபுரம் நான்கு வழிசாலையில் சென்று கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்த மினி லாரி திடீரென தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்கானது. இதில் லாரி ஓட்டுனர் விஜய் லேசான காயங்களுடன் உயிர்த்தபினார். சாலையில் கவிழ்ந்து கிடந்த லாரியை அருகில் இருந்தவர்கள் உடனடியாக அப்புறப்படுத்தினர். விபத்து குறித்து பரமக்குடி டவுன் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
நான்கு வழிச்சாலையில் தலைக்குப்புற கவிழ்ந்த மினி லாரி, டிரைவர் படுகாயம், போலீசார் விசாரணை.
