புதுக்கோட்டை அடுத்த நமணசமுத்திரம் அருகே உள்ள தேக்காட்டூர் ஊராட்சிக்குட்பட நமணசமுத்திரம் குடியிருப்பு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பயிலும் மாணவர்களை பள்ளி கழிவறையை சுத்தம் செய்ய வைத்த வீடியோ வெளியானதை தொடர்ந்து சம்பந்தப்பட்ட பள்ளியில் கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

மேலும் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் விசாரணை மேற்கொள்ளும் அதிகாரிகள் விசாரணை முடிவில் தவறு செய்துள்ள ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க உள்ளனர்.