அதிக இரைச்சலுடன் தடுப்பு கம்பிகளை தாண்டி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறதுபொள்ளாச்சி, வால்பாறை உள்ளிட்ட பகுதிகளில் தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து பெய்து வருகிறது.இதனால் சிற்றாறு, ஓடைகள் உள்ளிட்டவைகளில் நீர் வர்த்த அதிகரித்துள்ளது.இந்நிலையில் பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் கவி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதன் காரணமாக சுற்றுலாப் பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீட்டிக்கப்பட்டு தொடர்ந்து கவியருவி இன்றும் மூடப்பட்டுள்ளது.இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களை விட இன்று அதீத அளவில் தண்ணீர் வெள்ளப்பெருக்காக அருவியில் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது.அதீத இரைச்சல் சத்தத்துடன் அருவியில் தடுப்பு கம்பிகளை தாண்டி தண்ணீர் கொட்டுகிறது.
வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலா பயணிகளுக்கு ஆழியார் கவியருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், நீரின் அளவு சீரான பின்பு சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.