காரைக்குடி என் ஜி ஓ காலனியில் உள்ள செல்போன் சர்வீஸ் மற்றும் ஜெராக்ஸ் கடையில் தீ விபத்து ஆறு லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதம்சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே என் ஜி ஓ காலனி மெயின் ரோட்டில் அமைந்துள்ள செல்போன் சர்வீஸ் மற்றும் ஜெராக்ஸ் கடை உள்ளது இந்த கடையை வினோத்குமார் என்பவர் நடத்தி வருகிறார் இன்று காலை வேலைக்கு வந்த பெண் ஷட்டரை திறந்து மெயின் சுவிட்சை போடும்பொழுது எதிர்பாராத விதமாக மின்சாதன பொருட்கள்.வெடித்து தீ பற்ற தொடங்கியது உடனடியாக அந்த பெண் வெளியே வந்துவிட்டார் சம்பவம் குறித்து தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர் அதற்குள் மல மல வேன பற்றி எறிந்த தீயில் செல்போன்கள் மற்றும் கம்ப்யூட்டர் ஜெராக்ஸ் இயந்திரம் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் எரிந்து சேதமாகியது 6 லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்ததாக தெரிவித்தனர் இந்த தீ விபத்து குறித்து காரைக்குடி வடக்கு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் அதிக மின்னழுத்தம் காரணமாக இந்த தீ விபத்து நடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது
