News South India https://newssouthindia.com South Indian News Portal Tue, 21 Jan 2025 10:38:06 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.1 https://newssouthindia.com/wp-content/uploads/2024/11/news-india-logo-150x150.png News South India https://newssouthindia.com 32 32 கல்கத்தா அரசு மருத்துவமனை பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை https://newssouthindia.com/2025/01/21/calcutta-government-hospital-female-trainee-doctor-sexually-assaulted/ Tue, 21 Jan 2025 10:36:59 +0000 https://newssouthindia.com/?p=3418

கல்கத்தா அரசு மருத்துவமனை பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட விவகாரத்தில் குற்றவாளி சஞ்சய் ராய்க்கு நேற்றைய தினம் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் அதை எதிர்த்து மேற்கு வங்க அரசு கல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு

குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என மேல்முறையீட்டு மனுவில் மேற்குவங்க அரசு வலியுறுத்தியுள்ளது.

]]>
3418
தடகளத்தில் தங்கம் வென்ற பள்ளி மாணவிக்கு உற்சாக வரவேற்பு https://newssouthindia.com/2025/01/21/a-warm-welcome-for-the-school-girl-who-won-gold-in-athletics/ Tue, 21 Jan 2025 10:09:59 +0000 https://newssouthindia.com/?p=3411

திருப்பூர் மங்கலம் சாலை பாரப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன், மணி மஞ்சுளா தம்பதியர் இவர்களது மகளான வர்ஷிகா ஜெய்வாபாய் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார் தடகளத்தில் ஆர்வம் மிகுந்த வர்ஷிகா பள்ளி மூலம் மாவட்ட, மாநில அளவிலான பல்வேறு போட்டிகளிலும் கலந்து கொண்டு வெற்றி பெற்று ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்ற தேசிய அளவிலான தடை தாண்டும் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்டார். கடந்த ஆறாம் தேதி நடைபெற்ற தேசிய அளவிலான தடகள போட்டியில் 14 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் தடை தாண்டும் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்ட இவர் தங்க பதக்கம் வென்றார். இதில் 80 மீட்டர் தடை தாண்டும் போட்டியில் 12.20 வினாடிகளில் ஓடி புதிய சாதனையையும் படைத்துள்ளார். மேலும் 4*100 தொடர் ஓட்ட போட்டியிலும் பங்கு பெறுவதற்கு தேர்வாகி உள்ளார். மீண்டும் திருப்பூர் திரும்பிய வர்ஷிகா இன்று பள்ளிக்கு வருகை தந்தார் அவருக்கு ஆசிரியர்கள் சக மாணவர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

]]>
3411
தாம்பரம் மாநகர காவல் எல்லையில் அடுத்து அடுத்து 10 இடங்களில் செயின் பறிப்பு, மறைமலை நகர் பெட்டிகடை பெண் https://newssouthindia.com/2025/01/21/10-chain-snatched-in-tambaram-city-police-limits-thiramalai-nagar-pet-shop-girl/ Tue, 21 Jan 2025 09:49:11 +0000 https://newssouthindia.com/?p=3405 பெண் போலீஸ் எஸ்.ஐ உள்ளிட்ட நபர்களிடம் செயின் பறித்து வாகன சோதனையில் இருசக்கரவாகனத்தை விட்டு தப்பிய ஓடிய இரண்டு மர்ம நபருக்கு போலீஸ் வலை

தாம்பரம் மாநகர காவல் எல்லையில் தொடர்ச்சியாக அடுத்து அடுத்து 10 இடங்களில் செயின் பறிந்த இருவர் தகவல் பெற்று தாம்பரத்தில் சோதனையில் பல்சர் வாகனத்தை நிறுத்தி இருவரை விசாரித்தபோது இருசக்கர வாகனத்தை விட்டு தப்பியோட்டம்,

நேற்று இரவு 7.30 மணியளவில் மறைமலை நகரில் பெட்டிக்கடையில் ராஜேஸ்வரி (50) என்கிற பெண்ணிடம் சிகரெட் வாங்கிய இருவர் வடமொழி கலந்து பேசியுள்ளனர், அசந்த நேரத்தில் 4 சவரன் செயினை பறித்து சென்றனர், அதனை தொடர்ந்து கூடுவாஞ்சேரி, ஓட்டேரி, மணிமங்கலம், பீர்க்கன்காரணை, சேலையூர், அகிய இடங்களில் செயின் பறித்த அவர்கள், தாம்ப்ரம் காந்தி சாலையில் சென்னை காவல் கட்டுப்பாட்டு அறையில் உதவி ஆய்வாளராக உள்ள் இந்திரா(58) என்பவரிடம் 5 சவரன் பறித்துள்ளனர்,

மொத்தமாக 20 சவரனுக்கு மேல் பறிப்பில் ஈடுபட்டு இருக்கலம் என தெரிகிறது

அதே வேளையில் தொடர் செயின் பறிப்பு காரணமாக போலீசார் உஷாரான நிலையில் இரவு 10.30 மணியளவில் தாம்பரத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்,

அப்போது பல்சர் வாகனத்தில் அதே அடையாளத்துடன் மாஸ்க் போட்ட இரண்டு நபர் வந்தவுடன் தடுத்து நிறுத்தி சோதனையில் ஈடுபட்டனர்,

இதனால் வழிப்பறி கொள்ளயர்கள் இருவரும் இருசக்கர வாகனத்தை விட்டு விட்டு தப்பியோடிவிட்டனர்,

இருசக்கர வாகனமும் திருட்டு வாகனம் என தெரிந்ததால் சிசிடிவி காட்சிகள் கைபற்றிய நிலையில் வந்த நபர்கள் வடமாநில நபர்களாக இருக்கும் என என்ன சென்னை சென்ரல், பெரம்பூர் ஆகிய ரெயில் நிலை தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர் ஆனால் பிடிபடவில்லை, இதனால் அவர்கள் சென்னை உள்ளே பதுங்கி இருக்கலாம் என தேடிவருகிறார்கள்.

]]>
3405
குமரி கடல் பகுதியில் வீசி வரும் பலத்த காற்று மற்றும் கடல் அலைகள் கடும் சீற்றத்துடன் பல அடி உயரத்திற்கு எழும்பியது https://newssouthindia.com/2025/01/21/the-strong-winds-blowing-in-the-kumari-sea-area-and-the-sea-waves-rose-several-feet-in-height-with-fierce-fury/ Tue, 21 Jan 2025 09:30:31 +0000 https://newssouthindia.com/?p=3396 சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி குமரி கடல் நடுவே அமைந்துள்ள திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் மண்டபம்,கண்ணாடி கூண்டு பாலத்திற்கு சுற்றுலா படகு சேவை தற்காலிகமாக ரத்து செய்து பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக நிர்வாகம் அறிவிப்பு. கடலின் தன்மையை பொறுத்து படகு சேவை ஆரம்பிப்பது குறித்து ஒலி பெருக்கி மூலமாக சுற்றுலா பயணிகளுக்கு அறிவிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

உலக சுற்றுலா தலங்களில் மிக முக்கியமானது இந்தியாவின் தென் கோடியில் அமைந்துள்ள குமரிமுனை.இங்கு கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை கண்டு ரசிப்பதற்காகவும் அதைப்போல் காலை, மாலை வேளைகளில் கடலில் சூரியன் உதயம் மற்றும் மறையும் இயற்கை காட்சியை கண்டு ரசிப்பதற்காகவும் உள்ளூர்,வெளியூர், வெளிநாடுகளில் இருந்து தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள். இந்நிலையில் குமரி கடல் பகுதியில் வீசி வரும் பலத்த காற்று மற்றும் கடல் அலைகள் கடும் சீற்றத்துடன் பல அடி உயரத்திற்கு எழும்பியவாறு ஆக்ரோஷத்துடன் காணப்படுவதாலும், சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி குமரி கடல் நடுவே அமைந்துள்ள திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் மண்டபம்,கண்ணாடி கூண்டு பாலத்திற்கு சுற்றுலா படகு சேவை இன்று இரண்டாவது நாளாக தற்காலிகமாக ரத்து செய்து பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.வரும் கால நிலையையும், கடலின் தன்மையையும் பொறுத்து படகு சேவை ஆரம்பிப்பது குறித்து ஒலி பெருக்கி மூலமாக சுற்றுலா பயணிகளுக்கு அறிவிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

]]>
3396
மதுரை டங்ஸ்டனுக்கு No. பரந்தூருக்கு Ok சொன்ன விஜய். காரணம் என்ன?உட்கட்சி பிரச்சனையை சமாளிக்க பரந்தூரை கையில் எடுக்கும் விஜய் https://newssouthindia.com/2025/01/21/no-for-madurai-tungsten-vijay-said-ok-to-paranthur-what-is-the-reason/ Tue, 21 Jan 2025 08:08:30 +0000 https://newssouthindia.com/?p=3391 தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கடந்த ஆண்டு அக்டோபர் 27 ஆம் தேதி கட்சியின் முதல் மாநாட்டில் தொண்டர்களை நேரடியாய் சந்தித்து ஆவேச உரையாற்றியதோடு இதுவரை பெரிய அளவில் எந்தவித போராட்டமோ, மக்கள் சந்திப்போ நடத்தாதது பெரும் ஏமாற்றத்தை தவெக கட்சி தொண்டர்களிடையே ஏற்படுத்தி இருந்தது. அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழா, கிண்டி அண்ணா பல்கலைக் கழக மாணவி பாதிக்கப்பட்ட விவகாரத்தில் ஆளுநரை சந்தித்து மனு கொடுத்தது போன்ற நிகழ்வுகளை விஜய் செய்திருந்தாலும் மக்களிடையே அது பெரிய அளவில் கவனம் பெறவில்லை.

இந்த சூழலில்தான் த.வெ.க பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்திற்கும் விஜயின் அரசியல் ஆலோசகர் ஜான் ஆரோக்கிய சாமிக்கும் இடையேயான பிரச்சனை பொது வெளிக்கு வந்தது. ஜான் ஆரோக்கிய சாமி புஸ்ஸி ஆனந்தின் செயல்பாடுகள் பற்றி பேசிய இரண்டு ஆடியோக்கள் வெளியே கசிந்து சமூக வலைதளங்களில் பரவி வைரல் ஆனது. முதல் ஆடியோவில். “விஜய் என்ற ஒற்றை நபருக்காகதான் வாக்குகள் வரப்போகிறது, ஆனால், விஜய்யை புஸ்ஸி ஆனந்த் மதிப்பதே இல்லை, தன்னை மட்டுமே முன்னிலைப்படுத்திக் கொள்ள புஸ்ஸி ஆனந்த் விரும்புகிறார். இது கட்சிக்கு பின்னடைவாகதான் அமையும், இதே நிலை தொடர்ந்தால் 2 சதவீத வாக்குகள் கூட பெற முடியாது” என வருத்தத்துடன் பேசி இருப்பார். இரண்டாவது ஆடியோவில் “புஸ்ஸி ஆனந்துக்கு புதுச்சேரி முதல்வராகும் விருப்பம் இருப்பதாகவும், சில நேரங்களில் புஸ்ஸி ஆனந்த் கட்சிக்காக பணியாற்றுவது போன்று காண்பித்துக் கொள்கிறார், சில நேரத்தில் சுயநலமாக பணியாற்றுகிறார், அதுமட்டுமின்றி கட்சியின் முக்கியமான அடுத்தகட்ட செயல்பாடு பற்றிய ரகசியங்களை புஸ்ஸி ஆனந்த் வெளிய கசிய விடுகிறார்” என்றும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை புஸ்ஸி ஆனந்த் மீது வைத்து அந்த ஆடியோக்களில் ஜான் ஆரோக்கியசாமி பேசி இருந்தது தவெக கட்சிக்குள்ளேயே சலசலப்பை ஏற்படுத்தியது.

இதன் காரணமாக பொது மக்கள் மத்தியில் தவெகவிற்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்ற தகவல் விஜய்யின் காதுகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அதன்பின் புஸ்ஸி ஆனந்த் , ஜான் ஆரோக்கியசாமி இருவரையும் பனையூர் பண்ணை வீட்டிற்கு நேரில் அழைத்து விவரங்களை கேட்டுள்ளார் விஜய். அப்போது நான் பேசியது உண்மைதான் ஆனால், அந்த ஆடியோவை நான் வெளியிடவில்லை வேறு யாரோ சதி செய்து வெளியிட்டுள்ளனர் என ஜான் ஆரோக்கிய சாமி கூறி உள்ளார். மேலும் உட்கட்சியில் நிலவும் அதிருப்தியையும் , கட்சி எவ்வளவு வீக்காக உள்ளது என்பதையும் புள்ளிவிவரங்களோடு விளக்கி கூறி இருக்கிறார் ஜான். ஆனால், புஸ்ஸி ஆனந்தோ கட்சி நன்றாக வலிமையாகதான் உள்ளது யாருக்கும் அதிருப்தி இல்லை என சொல்லி இருக்கிறார் அனைத்தையும் விஜய் அமைதியாக கேட்டுக்கொண்டார். அதோடு, ஜான் பேசிய ஆடியோவை வெளியிட்டது யார் என விசாரணை நடத்தி விரைவில் கண்டறிகிறோம் என புஸ்ஸி ஆனந்த் கூறி இருக்கிறார்.

சரி உட்கட்சி பிரச்சனை இனி வெளியே போக கூடாது, அப்படி கசிந்தால் நான் அடுத்த கட்ட முடிவை எடுக்க வேண்டி வரும் என இருவரிடமும் கடுமை காட்டி இருக்கிறார். அத்துடன் பொது மக்கள் மத்தியில் இழந்த மதிப்பை சரிக்கட்டவும் தொண்டர்களை உச்சாகப்படுதவும் என்ன செய்யலாம் என இருவரிடமும் யோசனையும் கேட்டுள்ளார். ஜான் ஆரோக்கிய சாமி டங்ஸ்டன் சுரங்க எதிர்ப்பு விவகாரத்தில் மதுரை விவசாயிகள் மற்றும் பொது மக்கள் பெரிய போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர் அதற்கு ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் கலந்து கொண்டால் ஒரே நேரத்தில் திமுக, பாஜக, அதிமுக மூன்று பெரும் கட்சிகளையும் எதிர்த்து அரசியல் செய்ய முடியும் மக்கள் மத்தியிலும் செல்வாக்கு உயரும் என கூறி இருக்கிறார். ஆனால் புஸ்ஸி ஆனந்தோ டங்ஸ்டன் விவகாரத்தை நாம் கையில் எடுத்தால் ஆளும் பாஜக அரசை பகைக்க வேண்டும் அதோடு அதிமுக வையும் எதிர்த்து பேசியாக வேண்டும் அப்படி செய்தால் நம் எதிர்கால அரசியலுக்கு சிக்கலாகும் என கூறி இருக்கிறார். விஜய்க்கும் புஸ்ஸி ஆனந்த் சொல்வது சரிதான் என தோன்றியிருக்கிறது.

தற்போதைய சூழலில் ஆளும் பாஜக அரசை பகைத்து கொள்ள வேண்டாம் என்ற முடிவில் விஜய் இருப்பதால் டங்ஸ்டன் வேண்டாம். அடுத்து வேறென்ன செய்வது என கேட்க புஸ்ஸி ஆனந்த் பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிரான மக்கள் போராட்டத்தை கூறி, நமது முதல் மாநாட்டில் கூட அதுபற்றி தீர்மானம் போட்டுள்ளோம் என நினைவுபடுத்தி உள்ளார். அந்த போராட்டத்திற்கு ஆதரவளித்து அவர்களை சந்தித்து தாங்கள் பேசலாம் அதோடு பத்திரிகையாளர் சந்திப்பையும் அங்கேயே நடந்ததலாம் அது நமக்கு நல்ல பெயரை கொடுக்கும் என யோசனை கூறி இருக்கிறார். அதில் பத்திரிகையாளர் சந்திப்பில் மட்டும் விஜய்க்கு உடன்பாடில்லை மற்ற ஏற்பாடுகளை செய்யுங்கள் என கூறி இருக்கிறார் விஜய் என்று தவெக விற்கு நெருக்கமான அரசியல் விமர்சகர் தெரிவித்தார்.

மக்கள் போராட்டங்களை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ள நினைக்கும் மற்ற அரசியல் கட்சிகளைப் போலவே விஜயும் நடந்து கொள்கிறாரே என்ற முனுமுனுப்பும் எழுந்துள்ளதாம்.

]]>
3391
‘காணும் பொங்கல் விடுமுறையை ரத்து செய்ய நேரிடும்’-பசுமை தீர்ப்பாயம் எச்சரிக்கை https://newssouthindia.com/2025/01/21/pongal-holiday-may-be-cancelled-pasumai-tribune-warns/ Tue, 21 Jan 2025 07:37:33 +0000 https://newssouthindia.com/?p=3382 கடந்த பொங்கல் விடுமுறை கொண்டாட்டத்தின் கடைசி நாளான காணும் பொங்கல் அன்று மெரினா கடற்கரையை குப்பை கூலமாக மாற்றியது குறித்து பசுமை தீர்ப்பாயம் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது.

காணும் பொங்கல் தினத்தன்று மெரினா கடற்கரையில் அதிக அளவு பொதுமக்கள் குவிந்தனர். அந்த நேரத்தில் பொதுமக்களால் போடப்பட்ட குப்பைகள் டன் கணக்கில் குவிந்தது.

இந்நிலையில் தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.

குப்பை கொட்டுபவர்களுக்கு உடனடியாக அபராதம் விதிக்கும் வகையில் சிறப்புப் படைகள் அமைக்க வலியுறுத்திய பசுமை தீர்ப்பாயம், இது சம்பந்தமாக விளக்கம் அளிக்கும்படி சென்னை மாநகராட்சியின் மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

மேலும் இந்த நிலை தொடர்ந்தால் காணும் பொங்கல் விடுமுறையை ரத்து செய்ய அரசுக்கு பரிந்துரைக்க நேரிடும் எனவும் எச்சரிக்கை விடுத்தது.

]]>
3382
பாஜகவிடம் பணிந்த எடப்பாடி பாஜக கூட்டணிக்கு தயாராகும் அதிமுக https://newssouthindia.com/2025/01/09/after-bowing-to-bjp-admk-prepares-for-alliance-with-bjp/ Thu, 09 Jan 2025 13:21:59 +0000 https://newssouthindia.com/?p=3373 பாஜக வோடு இனி எந்த காலத்திலும் கூட்டணி இல்லை என அறிவித்திருந்தார் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி. ஆனால் சமீபகாலமாக அதிமுகவின் செயல்பாடுகள் பாஜகவோடு நெருங்கி போவதை உறுதி செய்வதாகவே உள்ளது என அரசியல் ஆர்வளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

அதிமுக தொண்டர்களின் விருப்பத்திற்கு ஏற்ப இனி பாஜகவோடு கூட்டணி இல்லை என எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தாலும், தொடர்நது பாஜக கொடுக்கும் நெருக்கடியை சமாளிக்க முடியாமல் திணறி வருகிறார். ஏறகனவே பழனிசாமியின் வலதுகரமான சேலம் இளங்கோவன் இடங்களில் மத்திய அரசின் வருமான வரித்துறை ரைடு நடத்தி இருந்தது. தற்போது அதன் தொடர்ச்சியாக தொழில் அதிபர் ஈரோடு ராமலிங்கதின் இடங்களில் சோதனை நடைபெற்றுள்ளது. பழனிசாமியின் மகனது சகளையின் தந்தை தான் இந்த ராமலிங்கம். ராமலிங்கமும் எடப்பாடி பழனிசாமியின் சம்மந்தி சுப்ரமணியனும் தொழில் பாட்னராக உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் ராமலிங்கத்திற்கும் சொந்தகமான கட்டுமான நிறுவனத்தின் பல இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி பல ஆவணங்களை எடுத்து சென்றுள்ளது.

ராமலிங்கத்திற்கு சொந்தமான கட்டுமான நிறுவனம் தான் கடந்த அதிமுக ஆட்சியில் 4000 கோடிக்கு அதிகமான டெண்டரை எடுத்திருந்தது. எடப்பாடி பழினிசாமி முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கான பொருளாதார உதவியை செய்தவர்களுள் ராமலிங்கமும் முக்கியமானவர் என கூறப்படுகிறது. அப்படி எடப்பாடி பழனிசாமிக்கு மிக நெருக்கமாக இருப்பவர் இடத்திலேயே வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளது நேரடியாக பழனிசாமிக்கு பாஜக கொடுத்த எச்சரிக்கையாகவே அரசியல் வட்டாரங்களில் பார்க்கப்படுகிறது.

இது பற்றி ஒரு அதிமுக ஆதரவு ஊடகவியாளர் கூறுகையில் “பாஜக கொடுத்த அழுத்தத்தின் காரணமாக தான் ஆளுநருக்கு ஆதரவாக எடப்பாடி பழனிசாமி நடந்து வருகிறார். ஆளுநரை வேந்தர் பதவியில் இருந்தே அகற்ற வேண்டும் என்றவர் ஜெயலலிதா, ஆனால் இன்று துணை வேந்தர் நியமனத்தில் தலையீடு, மாநில நிர்வாகத்தில் இடையூறு செய்துவரும் ஆளுநர் ரவிக்கு ஆதரவாக அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி செயல்பட்டு வருவது முரணாக இருக்கிறது. அண்ணா பல்கலைக் கழக விவகாரத்தில் ஆளுநர் மற்றும் திமுக இரண்டு தரப்பையும் கடுமையாக தாக்கி போராட்டம் செய்திருக்க வேண்டும் ஆனால் அண்ணா பல்கலை துணைவேந்தரையே நியமிக்க விடாமல் நிர்வாகசீர்கேட்டுக்கு காரணமான ஆளுநரை காப்பற்றும் விதமாக நடந்து கொண்டு, வெறும் திமுக வை மட்டும் எதிர்க்கிறோம் என்றால் மக்கள் நம்புவார்களா. ? தனக்கு அரசியல் செய்ய கிடைத்த வாய்ப்பை எல்லாம் பாஜக விற்கு பயந்து கொண்டு வீணடித்து வருகிறார் பழனிசாமி. தற்போது பாஜக கூட்டணிக்கு அதிமுக வந்தே ஆகிய வேண்டும் என பாஜக கொடுக்கும் அழுத்தத்தை தாங்க முடியாமல் பாஜகவோடு கூட்டணி வைக்க தயாராகி விட்டார் பழனிசாமி. இது நிச்சயம் அதிமுக வை மேலும் பலவீனப்படுத்துமே தவிர எந்த விதத்திலும் அதிமுக வளர்ச்சிக்கு உதவாது. தன்னை காப்பாற்றி கொள்ள அதிமுக வை பலி கொடுக்க முடிவு செய்துவிட்டார் பழனிசாமி” என்றார் வருத்தத்துடன்.

டங்கஸ்டன் விவகாரத்தில் பாஜக அரசை விமர்சிக்காதது , பல்கலைக் கழக துணை வேந்தர்களை நியமிக்கு உரிமையை ஆளுநருக்கே வழங்கும் UGC முடிவை எடப்பாடி பழனிசாமி எதிர்க்காதது , தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்த விவகாரத்தில் ஆளுநரை கண்டிக்காதது என பாஜக அரசுக்கு ஆதரவாக செயல்பட்டுவருவது அதிமுக வினரையே அதிருப்தியில் தள்ளி உள்ளது. யார் அந்த சார் என்ற போராட்டத்தை முன்னெடுத்த அதிமுகவிற்கு பின்னடைவாக அண்ணாநகர் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் அதிமுக வட்டச்செயலாளர் கைது செய்யப்பட்டுள்ளது அதிமுகவின் போராட்டத்தையே கேள்விக்குள்ளாக்கி உள்ளது. இந்த சூழலில் உயர் நீதிமன்றமே கண்டித்த பின்னும் மீண்டும் மீண்டும் யார் அந்த சார் என்றே அதிமுக பேசி கொண்டிருப்பது , ஆளுநருக்கும் பாஜக அரசுக்கும் எதிராக மக்கள் கோபம் திரும்பி இருப்பதை மடைமற்றவே அதிமுக இவ்வாறு நடந்து வருகிறது என்ற கருத்தும் எழுந்து வருகிறது. அதிமுகவின் சமீபத்திய செயல்பாடுகளும் அதை ஆமோதிப்பதாகவே உள்ளது.

தன்னை வலுவான எதிர்க்கட்சியாக நிலைநிறுத்திக் கொள்ள அவ்வளவு வாய்ப்பு இருந்தும் பாஜகவின் அழுத்தத்திற்கு பயந்து அதை செய்யாமல் தற்போது பாஜகவோடு கூட்டணி வைக்க ஆயத்தமாகி வரும் எடப்பாடி பழனிசாமியின் முடிவை அதிமுக வின் தொண்டர்களே ஏற்பார்களா என தெரியவில்லை.

வரும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை கூட பாஜக விற்கு விட்டுக் கொடுத்துவிடலாம் என்ற முடிவில் பழனிசாமி இருக்கிறாராம். இது பற்றி அதிமுக வத்தார்த்தில் விசாரிக்கும் போது ” நீங்கள் சொல்வது உண்மை தான் 11 ஆம் தேதி நடக்கும் மாவட்ட செயலாளர் கூட்டத்திற்கு பின் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடாது என்று அறிவிப்பு வரும். கடந்த விக்காரவாண்டி தேர்தலிலேயே அதிமுக பின் வங்கி பாஜக கூட்டணிக்கு விட்டுக் கொடுத்தது எங்களுக்கே பிடிக்கவில்லை, நாம் எதிர்க்கட்சியாக இருந்து கொண்டு அதை பாஜக விற்கு விட்டுக் கொடுப்பது நியாயமா..? மக்கள் நம்மை மதிப்பார்களா.? இப்போது ஈரோடு கிழக்கிலும் பாஜகவிற்கு விட்டுக் கொடுத்தால் நாம் அரசியலில் இருந்தே விலகி கொள்ளலாம். . ஆனால் நாம் என்ன செய்ய முடியும்” என வீரக்தியோடு பேசினார்.

]]>
3373
பாலியல் குற்றங்களின் சரணாலயம் அதிமுக என்பது மீண்டும் அம்பலம் . போக்குவரத்து துறை அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர் அறிக்கை. https://newssouthindia.com/2025/01/09/admk-is-again-exposed-as-a-sanctuary-for-sex-crimes-report-by-transport-minister-ss-sivashankar/ Thu, 09 Jan 2025 13:12:14 +0000 https://newssouthindia.com/?p=3368 பெண்கள் பாதுகாப்பில் தமிழ்நாட்டு மக்களிடம் நற்பெயர் பெற்று வரும் திராவிட மாடல் அரசின் மீது எப்படியாவது களங்கம் சுமத்தவேண்டும் எனும் சிறுபுத்தியோடு தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என அருவருக்கத்தக்க வதந்தியைப் தொடர்ந்து பரப்பி வந்தார் பச்சைப் பொய் பழனிசாமி.

அப்படித்தான் அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் எப்படியாவது திமுகவின் பெயரை சேர்த்துவிட வேண்டும் எனும் இழிவான நோக்கத்தோடு தொடர்ந்து யார் அந்த சார்? என வதந்தி அரசியலை நடத்தி வந்தார்.

அற்பத்தனமான புத்திக்கு இப்பொழுது விடை கிடைத்துவிட்டது, அண்ணா பல்கலைக்கழக வழக்கில் அல்ல, அண்ணாநகர் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளுக்கு உதவிய அதிமுக 103 வது வட்டச்செயலாளர் சுதாகர் என்பவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். மேலும் சிறுமியின் புகாரை வாங்காமல் இழுத்தடித்த காவல் ஆய்வாளர் ராஜி என்பவரையும் தமிழ்நாடு அரசின் சிறப்பு புலனாய்வு குழு கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது. தனது கட்சியை சேர்ந்தவரைக் காப்பாற்ற பழனிசாமி யார் இந்த சார்? என நடத்திய கபட நாடகம் இன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

அண்ணாநகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் சிபிஐ விசாரணை வேண்டும் என்றும், தமிழ்நாடு அரசு உண்மையை மறைக்க சிபிஐ விசாரணையை மறுப்பது போலவும் பொதுவெளியில் பிதற்றி வந்தார் பழனிசாமி. இதோ உண்மை சந்திக்கு வந்து விட்டது. அண்ணாநகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் மறைந்திருந்த அந்த சார் அதிமுக வட்டச் செயலாளர்தான்.

பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகள் தொடங்கி இராமேஸ்வரம் குளியலறை கேமரா வைத்த காமுகன், அண்ணாநகர் சிறுமி பாலியல் வழக்கு வரை பாலியல் குற்றாவாளி “சார்களின்” சரணாலயம் அதிமுக என்பது அம்பலமாகியிருக்கிறது. செப்டம்பர் மாதம் பதிவுசெய்யப்பட்ட வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உடனடியான உறுதியான நீதியைப் பெற்றுத்தரவே சிபிஐ விசாரணைக்கு தமிழ்நாடு அரசு தடை வாங்கியது. சிபிஐ விசாரணை ஏற்படுத்தும் தாமதத்திற்கு பொள்ளாச்சி வழக்கே சான்று.

‘அண்ணா, அண்ணா விட்டுடுங்க அண்ணா’ என்று பொள்ளாச்சி பெண்கள் கதறிய குரலில் தமிழ்நாடே அதிர்ந்து போனது அந்த வழக்கில் குற்றவாளிகளை தப்பிக்க வைக்க தனது கள்ளக்கூட்டாளி பாஜகவோடு சேர்ந்து அதிமுக செய்த காரியங்கள்தான் இன்றும் அந்தக் கொடுமைக்கான நீதியை பெற்றுத்தர தாமதத்தை ஏற்படுத்தி உண்மை குற்றவாளிகளை காப்பாற்றி வருகிறது.

இந்திய அளவில் பெண்கள் மீதான கொடூரமான பாலியல் வன்கொடுமைகளை நிகழ்த்துவதில் முன்னணியில் இருக்கும் தனது கள்ளக்கூட்டணி பாஜகவிற்கு கொஞ்சமும் சளைத்த கட்சி அல்ல அதிமுக என்பது மற்றுமொருமுறை அண்ணாநகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் நிருபிக்கப்பட்டுள்ளது.

இனியும் யார் அந்த சார்? என்று பச்சைப் பொய் பழனிசாமி கேட்க விரும்பினால் கண்ணாடியைப் பார்த்துதான் கேட்க வேண்டும்.

இன்றைக்கு காவல் ஆய்வாளரையே கைது செய்திருப்பதன் மூலம் எத்தகையும் சார்புமற்ற நேர்மையான விசாரணையை நடத்தி பாதிக்கப்பட்டோருக்கு விரைவான நீதியைப் பெற்று தரும் விட மாடல் அரசின் வெளிப்படையான நிர்வாகத்திறன் மக்கள் u 2/3 ல் மீண்டுமொருமுறை உறுதியாகியுள்ளது.

அண்ணா நகர் வழக்கானாலும் சரி, அண்ணா பல்கலைக்கழக வழக்கானாலும் சரி பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையை நிகழ்த்திய எந்த “சாரும்” மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் கடுமையான நடவடிக்கைக்கு தப்பிக்க முடியாது. ஆனால் அந்த சார்கள் பலரும் அதிமுகவினராக இருப்பதுதான் வெட்க கேடு.

பாலியல் குற்றவாளிகளின் புகலிடமாக அதிமுகவை மாற்றி அவர்களை பாதுகாத்துவரும் பழனிசாமி தனது கள்ளக்கூட்டாளி பாஜகவுடன் சேர்ந்து கொண்டு இனியும் யார் அந்த சார்? என மக்களிடம் நாடகமாடினால் யோக்கியன் வரான் சொம்பைத் தூக்கி உள்ளே வை” என மக்கள் புறக்கணித்து செல்வார்கள்.

அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் உடனடியாக குற்றவாளி ஞானசேகரன் கைது செய்யப்பட்டு விசாரணை தீவிரமாக நடைபெற்றுவந்தபோதும், தமிழ்நாடு அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதுபோல திசைதிருப்பல் அரசியலில் ஏன் பழனிசாமி ஈடுபடுகிறார்? எனும் சந்தேகம் தமிழ்நாட்டு மக்களிடையே இருந்தது. அண்ணாநகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் தனது கட்சிக்காரரை காப்பாற்ற அவர் நடத்திய கபடநாடகம்தான் அது என்பது இன்று மக்களிடம் அம்பலபட்டுவிட்டது.

தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என பழனிசாமி நடத்தும் கபடநாடகம் எடுபடபோவதில்லை. இனி ஒருநாளும் மக்களிடத்தில்

பெண்கள் மீது எந்த வகையில் வன்முறை நிகழ்த்தப்பட்டாலும் அதை திராவிட மாடல் அரசு எந்த வகையிலும் அதை சகித்துக் கொள்ளாது, அப்படிபட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் வழிகாட்டியுள்ளார். மாண்புமிகு முதலமைச்சரின் ஆட்சியில் பெண்களுக்கு குற்றமிழைத்த யாரும் சட்டத்தின் பிடியிலிருந்து ஒருநாளும் தப்பிக்க முடியாது என்று மாண்புமிகு போக்குவரத்து துறை அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர் தன்னுடைய அறிக்கையில் தெரிவித்தார்

]]>
3368
விழுப்புரம் அருகே 8 லட்சம் பணத்திற்காக நண்பரை கொலை செய்து புதைத்த இடத்தில் 3 மாதத்திற்கு பிறகு சடலம் தோண்டி கண்டுப்பிடிப்பு https://newssouthindia.com/2025/01/09/near-villupuram-dead-body-found-after-3-months/ Thu, 09 Jan 2025 12:55:24 +0000 https://newssouthindia.com/?p=3361 விழுப்புரம் மாவட்டம் அரசூர் அருகே சேமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி முத்துக்குமார் அவருடைய நண்பர் அதே ஊரைச் சேர்ந்த தமிழரசன் என்பவர் முத்துக்குமாரின் ரூ. 8 லட்சம் பணத்தை பெற்று திரும்பி கொடுக்காததால் அவரை கொலை செய்து மலட்டாற்றில் புதைத்ததாக தெரிவித்தார். கடந்த வாரம் தோண்டி பார்த்தும் சடலம் கிடைக்கவில்லை இந்நிலையில் தமிழரசன் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்

இந்நிலையில் கடந்த 4 ஆம் தேதி முதல் திருவெண்ணெய்நல்லூர் போலீசார் தமிழரசனை 5 நாள் போலீஸ் காவல் எடுத்து விசாரணை செய்து வந்தனர். விசாரணையில் அவர் தமிழரசனின் நிலத்திலேயே புதைத்ததாக அளித்த தகவல் பேரில் தற்போது அந்த சடலத்தை திருவெண்ணெய்நல்லூர் போலீசார் தோண்டி எடுத்துள்ளனர் தொடர்ந்து தமிழரசனிடம் கொலைக்கு வேறு யாராவது உடனடியாக இருந்தார்களா என்ற கோணத்தில் விசாரணை செய்து வருகின்றனர். மீண்டும் இன்று மாலை தமிழரசனை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த உள்ளனர்

மூன்று மாதத்திற்கு பிறகு கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட இடம் கண்டுபிடித்து சடலத்தை தோண்டி எடுத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும், அதிர்ச்சியும் ஏற்படுத்தியது

]]>
3361
சீமான் கொடும்பாவி எரித்து போராட்டம்.. https://newssouthindia.com/2025/01/09/protest-by-burning-seeman-kodumbavi/ Thu, 09 Jan 2025 12:44:59 +0000 https://newssouthindia.com/?p=3354 தந்தை பெரியார் குறித்து அவதூறாக பேசிய சீமானை கண்டித்து தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஈரோட்டில் பன்னீர்செல்வம் பூங்காவில் சீமானின் உருவ பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்..

தடுத்து நிறுத்தி தீயை அணைத்த போலீசார் உருவ பொம்மை எரித்த மூவரை கைது செய்தனர்..

]]>
3354