கொடைக்கானல் பள்ளங்கி கோம்பை பகுதிகளை நேற்று மாலை பொழுது முகாமிட்டுள்ள யானை கூட்டத்தால் விவசாயிகள் அச்சம் …
தொடர்ந்து யானைக் கூட்டங்கள் முகாமிட்டுள்ளதால்
விரட்ட கோரிக்கை…’

கொடைக்கானல் மற்றும் கொடைக்கானலை சுற்றியுள்ள மலை கிராமங்களில் தொடர்ந்து வனவிலங்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வரக்கூடிய நிலையில் கொடைக்கானல் அருகே உள்ள பள்ளங்கி கோம்பை பகுதியில் முகாமிட்டுள்ள பத்திருக்கும் மேற்பட்ட யானைகளால் கிராம மக்கள் அச்சம்…
இந்நிலையில் நேற்று மாலை கொடைக்கானல் அருகே உள்ள பள்ளங்கி கோம்பை பகுதியில் விவசாய நிலத்தில் யானை கூட்டம் முகாம் இட்டு விவசாய பயிர்களை நாசம் செய்து வருகின்றன. சுமார் பத்துக்கும் மேற்பட்ட யானைகள் கடந்த ஒரு வார காலமாக முகமிட்டுள்ளதாக விவசாயிகள் தகவல்..
மேலும் அப்பகுதியில் இது போன்ற வனவிலங்குகள் அடிக்கடி விவசாய நிலத்தை அழித்து வருவதால் விவசாயிகள் பலமுறை கோரிக்கை வைத்தும் வனத்துறை சார்பாக எந்த ஒரு நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.. தொடர்ந்து கொடைக்கானல் மற்றும் கொடைக்கானலை சுற்றி உள்ள மலை கிராமங்களில் வனவிலங்குகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வரக்கூடிய நிலையில் மனித விளங்கும் முதல் அதிகரித்து வருகிறது..