தர்மபுரியில் இருந்து ஆந்திராவில் கோழி ஏற்றி வந்த மினி லாரி சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுருந்த லாரி மீது மோதி விபத்து டிரைவர், கிளினர் பலி

தர்மபுரியில் இருந்து ஆந்திர மாநிலன் ஸ்ரீகாகுளத்திற்கு கோழிகளை ஏற்றி கொண்டு மினி லாரி திருப்பதி வழியாக சென்று கொண்டுருந்தது.

இந்த மினி லாரி ஏர்பேடு மண்டலம், மெர்லபாக்காவில் நாயுடுபேட்டை – புத்தலப்பட்டு தேசிய நெடுஞ்சாலையில் மங்கம்பேட்டாவிலிருந்து நெல்லூர் துறைமுகத்திற்குச் செல்லும் வழியில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுருந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் கோழி ஏற்றி வந்த மினி லாரி டிரைவர் தர்மபுரியை சேர்ந்த கிருஷ்ணன் (55), கிளினர் பெருமாள் ( 40) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். நிகழ்விடத்திற்கு வந்த ஏர்பேடு போலீசார் சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீகாளஹஸ்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.