கரூர் மாவட்டம் குளித்தலை அருகே சிந்தலவாடி கிராம ஊராட்சி மகிளிப்பட்டியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பாக அந்த பகுதியில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்டப்பட்டது. மேல்நிலை நீர் தேக்க தொட்டி பழுதடைந்ததால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்நிலையில் இன்று மேல்நிலை நீர் தேக்க தொட்டி அடிப்பகுதியை காங்கிரீட் பழுதடைந்து தண்ணீர் கசிந்து வருவதும் மற்றும் சிமெண்ட் காரைகள் பெயர்ந்து ஆங்காங்கே விழுந்து வருகிறது.
அந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை பயன்படுத்தி தான் தற்போது தண்ணீர் வசதி பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் இன்று காலையில் அதன் அருகே 5 இளைஞர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து அடிப்பகுதி காங்கிரீட் பெயர்ந்து இடிந்து கீழே விழுந்து உள்ளது. அதன் அருகே விளையாடிக் கொண்ட இளைஞர்கள் சத்தம் கேட்டவுடன் தாவி குதித்து ஓடி விட்டனர்.
இதனால் அந்த இளைஞர்களுக்கு சிறு காயம் இன்றி உயிர் தப்பினர்.
மேலும் அந்த நீர் தேக்க தொட்டி இருக்கும் இடம் அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இருக்கும் சாலையின் மறுபுறம் பள்ளி இருப்பதால் அந்த சாலை வழியாகத்தான் மாணவர்கள் சென்று வர வேண்டும். மேலும் பொதுமக்கள், விவசாயிகளும் அந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் எப்போதும் வேண்டுமானாலும் நீர் திறக்க தொட்டி இடிந்து விழும் நிலையில் அச்சத்துடனே அந்த பகுதியை கடந்து செல்கின்றனர்.
இந்த பழுதடைந்த நீர்த்தேக்க தொட்டியில் இருந்து துருப்பிடித்தும், பாசான் படிந்தும் தண்ணீர் வருவதால் அதை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
உடனடியாக மாவட்ட நிர்வாகம் பழுதடைந்த நீர்த் தேக்க தொட்டியை இடித்து விட்டு புதிதாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டி தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.