கடலூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில்..

சிப்காட் சாயப்பட்டறை ரசாயன தொழிற்சாலை வெடித்து விபத்து ஏற்பட்ட குடிகாடு கிராமத்தில் வீடுகளிலும் தெருக்களிலும் தேங்கிய ரசாயன கழிவுகளை அகற்றும் பணி துவங்கி நடைபெற்று வருகிறது..

மேலும் அப்பகுதியில் மருத்துவ முகாம்கள் நடைபெற்று வரும் நிலையில் அப்பகுதி மக்கள் மருத்துவ முகாமில் மருத்துவரை சந்தித்து வருகின்றனர்.

சம்பவ இடத்தில் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தொழிற்சாலை மற்றும் பாதிக்கப்பட்ட கிராமத்தில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு வருகிறார்..