குன்னூர்.
குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 65-வது பழக்கண்காட்சி இன்று காலை 10 மணிக்கு நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு துவக்கி வைக்கிறார். குன்னூர் சிம்ஸ் பூங்காவில்
4 டன் பழங்களை கொண்டு கடற்கரையைப் போல மணல் வீடு எழுமிச்சை பழம் பழமையான கார் உட்பட 13 உறுவங்ள் பழங்களால் வடிவமைக்கப்
பட்டுள்ளது. மேலும்
5 இலட்சம் மலர்செடிளில் வண்ண வண்ண மலர்கள் பூத்துக் குளுங்குகின்றன.

நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் கோடை சீசனை முன்னிட்டு மலை மாவட்டத்திற்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்த தோட்டக்கலை துறை சார்பில் கோடை விழாக்கள் நடைபெறுகின்றன. குறிப்பாக குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 65 -வது பழக்கண்காட்சி இன்று துவங்கி 26 ம் தேதி வரை நான்கு நாட்களுக்கு நடைபெற உள்ளது. அதற்கான ஏற்பாடுகளை தோட்டக்கலைத் துறையினர் சிறப்பாக செய்துள்ளனர் மேலும்

இந்த ஆண்டு சிம்ஸ் பூங்கா துவங்கி 151-வது ஆண்டு என்பதால் வரக்கூடிய சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்த பூங்கா நுழைவாயில் முன்பு 35 வகையான பழங்களை கொண்டு அலங்கார நுழைவாயில் அமைக்கப்பட்டுள்ளது மேலும்
நுழைவாயில் பகுதியில் 1 டன் எலும்பிச்சை பழங்களால் ஆன மிகப்பெரிய. எலும்பிச்சை பழம் , தென்னை மரம் , ஜீஸ் கிளாஸ் , ஜஸ் கிரீம்,மனல் வீடு குடை மற்றும் ஜிடி நாயிடுவை பெருமை சேர்க்கும் வகையில் பழமையான கார் போன்ற உறுவங்கள் 4 டன் பழங்களைக் கொண்டு தத்ரூபமாக வடிவமைகபட்டுள்ளது .மேலும் தமிழகத்தில் உள்ள தோட்டக்கலை துறைக்கு சொந்தமான தோட்டக்கலை பண்ணைகளில் விளைவிக்கப்படும் அனைத்து வகையான பழங்களும் சிறப்பு அரங்குகள் மூலம் பல்வேறு பழங்களை கொண்டு பட்டாம்பூச்சி மயில் மீன் போன்ற உருவங்கள் கண்காட்சியில் காட்சிப்படுத்தப் பட்டுள்ளது

மேலும் சிம்ஸ் பூங்காவில் ஏற்கனவே நடவு செய்யப்பட்ட 5 லட்சம் மலர் செடிகள் அனைத்தும் தற்போது பூத்துக் குலுங்கி சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.