கேரள மாநிலம் கொல்லம் மற்றும் ஆலப்புழா கடல் ஓரங்களில் கரை ஒதுங்கும் கண்டேனர்கள் கொச்சின் துறைமுகத்திற்கு எடுத்து செல்லும் பணியை ராசச கிரேன்கள் பயன்படுத்தி துவங்கி உள்ளனர்



இதுவரை 35க்கும் மேற்பட்ட கண்டெய்னர்கள் கரை ஒதுங்கி உள்ளது ஆபத்தான எந்த பொருளும் இதுவரை கண்டேனர்களில் கண்டறியவில்லை
தொடர்ந்து கண்டெய்னரில் கரை ஒதுங்க வாய்ப்புள்ளதால் கரையோர பகுதி மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளார்கள்
கடந்த இரு தினங்களுக்கு முன்பு கொச்சியில் கடலில் மூழ்கிய கப்பலில் இருந்து நேற்று முன்தினம் இரவு முதல் கண்டேனர்கள் கரை ஒதுங்க துவங்கியுள்ளது

ஏற்கனவே அதிகாரிகள் கணித்தபடி தெற்கு கடலோர பகுதிகளான கொல்லம் மற்றும் ஆலப்புழாவில் கண்டெய்னர்கள் கரை ஒதுங்கி வருகிறது

தொடர்ந்து கரை ஒதுங்கும் கண்டேனர்களை கொல்லம் பகுதியில் இருந்து கொச்சின் துறைமுகத்திற்கு எடுத்துச் செல்லும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.