நாகர்கோவில்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் குமரி மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற கல்லூரி கனவு நிகழ்ச்சி 1080 மாணவர்கள் பங்கேற்பு.
குமரி மாவட்ட பள்ளி கல்வித்துறை சார்பில் கல்லூரி கனவு பிளஸ் 2 மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி நாகர் கோவிலில் இன்று நடந்தது.நாகர்கோவில் பொன் ஜெஸ்லி தனியார் பொறியியல் கல்லூரியில் குமரி மாவட்ட மாணவ மாணவியருக்காக நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அழகுமீனா கலந்துகொண்டு தலைமை வகித்து பேசினார்,அரசு பள்ளியில் படித்த மாணவ மாணவியர்களுக்கு மூன்று விதமான நலன்கள் உள்ளன.
மாணவர்களுக்கு தமிழ்புதல்வன் திட்டத்தின் கீழ் ரூ.1000-யும். மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் ரூ.1000யும். மூன்றாவதாக 7.5 சதவீத இடஒதுக்கீடும் வழங்கப்பட்டு வருகிறது. வருகை தந்துள்ள மாணவர்களுக்கு எந்தவொரு கலந்தாய்வு அல்லது வேறு எந்த சேர்க்கை நடைமுறையும் இல்லாமல் உடனடியாக Spot Admission செய்யும் நடைமுறையும் உள்ளது. பொருளாதார ரீதியாக கஷ்டப்படும் மாணவர்கள் பொறியியல் படிப்பு படிக்க வேண்டும் என்று விரும்புகிற மாணவர்களுக்கு தனியார் பொறியியல் கல்லூரிகள். ஐ.டி.ஐ கல்லூரிகள், தொழில்நுட்ப கல்லூரிகள் உள்ளிட்ட கல்லூரிகள் உங்களுடைய கல்வி கட்டணத்தை நாங்களே எடுத்துக்கொள்கிறோம் என்று கூறி இங்கு வந்துள்ளார்கள்.
நீங்கள் அதை பயன்படுத்தி கொள்ளுங்கள். நம்முடைய மாவட்டத்திற்குள் படிக்க விரும்பும் மாணவர்கள் எந்த பாடப்பிரிவை படிக்க விரும்புகிறீர்கள் என்பதை இங்கு வைக்கப்பட்டுள்ள அரங்குகளை பார்வையிட்டு, தேர்வு செய்து கல்லூரியில் சேர்ந்துகொள்ளுங்கள். மேலும் கல்வி கடன் தொடர்பான தகவல்களை பெற மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் அவர்களை அணுகி நீங்கள் உங்கள் கேள்விகளை கேட்டு, நீங்கள் விவரங்களை தெரிந்துகொள்ளுங்கள்.
இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா பேசினார். இந்த கல்லூரி கனவு நிகழ்ச்சியில் குமரி மாவட்டத்தில் பல்வேறு பள்ளிகளில் இருந்து 1080 மாணவர் கள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் மரிய பாக்கியசீலன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி உட்பட பலர் கலந்து கொண்டனர்
