கோவை

கோவை வைதேகி நீர் வீழ்ச்சி செல்லும் சாலையில் காட்டு யானை தாக்கி ஒருவர் பலி.

கோவை வைதேகி நீர் வீழ்ச்சிக்குச் செல்லும் சாலையில், மாலை நேரங்களில் காட்டு யானைகள் நடமாட்டம் உள்ளது.

இந்நிலையில் பூலுவபட்டியை சேர்ந்த சுரேஷ்அபிமன்யூ (33), என்ற நபர் தனது நண்பரான சரவணன் (28) என்பவருடன் இரு சக்கர வாகனத்தில் இரவு 11.30 மணியளவில் சென்றார்.

அப்போது விவசாய நிலத்திற்குள் யானை செல்லாமல் இருக்க வனத்துறையினர் ஒரு முனையில் விரட்டினர்.

அப்போது யானை வந்த போது இரு சக்கர வகனத்தில் வந்த இருவரையும் தாக்கியது. இதில் சுரேஷ்அபிமன்யூ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

ஆலாந்துறை போலீசார் விசாரணை.