
கோடை காலம் ஆரம்பிக்கும் முன்னரே வெயில் பட்டையை கிளப்ப ஆரம்பித்திருக்கி றன. கோவையில் வழக்கத்தைவிட கூடுதலாகவே வெயில் கொளுத்த ஆரம்பித்திருக்கின்றன. இந்த நிலையில், சாலையில் நடந்து செல்வோர் குடைபிடித்து வெயிலிலிருந்து தப்பித்தாலும், இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகள் வெயிலின் வெக்கைக்கு ஆளாகின்றனர்.
இந்த நிலையில், கோவையில் வாகன ஓட்டிகளை வெயிலிலிருந்து காக்க, குடை விரைத்திருக்கின்றனர் மாநகராட்சி .
கோடை வெயிலை முன்னிட்டு 3 மாதங்களுக்கு வெயில் தாக்கம் அதிகமாக இருக்கும். இதனால் வாகன ஓட்டிகள் சிக்னலில் நிற்கும் போது வெயிலில் இருந்து தற்காத்து கொள்ளும் வகையில் தற்காலிக நிழற்பந்தல்கள் கடந்த ஆண்டு கோவை மாநகரில் பெரும்பாலான சிக்னல்களில் அமைக்கப்பட்டன. கடந்த ஆண்டு நல்ல பயணை தந்த நிலையில், இந்த ஆண்டும் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் மாநகரில் சிக்னல்களில் நிழற் பந்தல் அமைக்கப்பட்டு வருகின்றன.
காந்திபுரம், டவுன்ஹால், சுந்தராபுரம் ஆகிய சிக்னல்களில் சுமார் 100 மீட்டர் அளவிற்கு இந்த தற்காலிக நிழல் பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனை பெரும்பாலான சிக்னல்களில் அமைக்க மாநகராட்சி நிர்வாகம் திட்டமிடப்படுள்ளது.கடந்த ஆண்டு இந்த தற்காலிக நிழல் பந்தலுக்கு மோகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
