கோவையில் சூறைக் காற்றால் சாய்ந்த 16 உயர் மின் அழுத்தம் கம்பங்கள் – இரவோடு இரவாக சீரமைத்த மின் வாரிய ஊழியர்கள்.

இரவு மாற்று ஏற்பாடாக மின் இணைப்பு வழங்கிய நிலையில் இரவு முழுவதும் பணியாற்றி மின் இணைப்பை சீர் செய்த ஊழியர்கள்.
கோவையில் நேற்று சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் காந்திபுரம் வி.கே.கே.மேனன் சாலையில் இருந்த மரம் விழுந்து, அடுத்தடுத்து இருந்த 16 உயர் மின் அழுத்த மின் கம்பங்கள் சாய்தது.
இதனால் சித்தாப்புதூர் சுற்று வட்டார பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
இதையடுத்து இரவு முழுவதும் 100க்கும் மேற்பட்ட ஊழியர்களை கொண்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
