போதை பொருள் பயன்பாட்டு பிரியர்கள் போதை விற்பனையாளராக மாறியது விசாரணையில் அம்பலம்.மென் பொறியாளர், தொழிலில் நட்டமடைந்த நபர்கள் ஒன்றிணைத்து போதை பொருள் விற்பனை.
கல்லூரி மாணவர்கள் உட்பட போதை பிரியர்களை வைத்து நடந்த போதை பொருள் வியாபாரம் தடுப்பு.
போதை பொருள் புழக்கத்தை தடுக்கும் வகையில், கோவை போலீசார் பல்வேறு நடவடிக்கையில் அதிரடி காட்டி வருகின்றனர் . அந்த வகையில், போலீசாருக்கு தரப்படும் ரகசிய தகவலை அடிப்படையாக வைத்து, தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, போதைப்பொருள் விற்கும் சட்டவிரோத கும்பலுக்கு எதிராக நடவடிக்கையில் இறங்கி இருக்கின்றனர். அதன் ஒரு பகுதியாக, மதுக்கரை பகுதிகளில் போதைப்பொருள் பயன்பாடு மற்றும் விற்பனை நடந்து வருவதாக போலீசாருக்கு தகவல் தரப்பட்டிருக்கின்றன. அதன் அடிப்படையில், மதுக்கரை காவல் நிலைய ஆய்வாளர் நவநீதகிருஷ்ணன் தலைமையிலான தனிப்படை, மதுக்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து ரோந்து பணியிலும் வாகனத்தை தணிக்கையிலும் ஈடுபட்டு வந்திருக்கின்றனர்.
அப்போது கேரளா பதிவு எண்ணில் ஒரு கார் வந்துள்ளது அந்த காரை நிறுத்தி மதுக்கரை போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருக்கின்றனர் அப்பொழுது காரில் பதிக்க வைத்திருந்த கஞ்சா பண்டல்களை பார்த்திருக்கின்றனர் அவர்களை பிடித்து விசாரித்த பொழுது அவர்கள் பெங்களூரில் இருந்து கோவை வழியாக கேரளாவுக்கு கஞ்சா பொட்டலங்களை கடத்திச் செல்வது பெரிய வந்தன அந்த காரில் பயணித்த கேரளாவை சார்ந்த கிரண்(28), நபில்(30), கோவையைச் சார்ந்த ஜெயக்குமார்(30), உள்ளிட்டோர் என்பதை விசாரணையை தெரிந்து கொண்ட போலீசார் மூவரையும் கைது செய்தனர் அவர்களிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் கோவையில் கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு போதை பிரியர்களையும் குறிவைத்து கஞ்சா உள்ளிட்ட போதை பொருள் விற்பனை செய்கின்ற கும்பலுக்கு சப்ளை செய்வதும் தெரிய வந்தன அதன் அடிப்படையில் கோவையைச் சார்ந்த அப்துல் நாசர்(36), ஷாஜகான் சாதிக் பாஷா(29) உள்ளிட்டோரையும் போலீசார் கைது செய்து அவர்கள் வீடுகளிலும் வாகனங்களிலும் விற்பனைக்காகவும் பயன்பாட்டுக்காகவும் பதுக்கி வைத்திருந்த கஞ்சா பொட்டலங்களையும் பறிமுதல் செய்தனர்.
அவர்களிடம் இருந்து சுமார் 8 ¾ கிலோ கஞ்சா, 10 கிராம் மெத்தபெட்டமைன் (METHAMPHETAMINE) உள்ளிட்ட போதை பொருட்களையும், போதைப்பொருள் விற்பனை செய்வதற்கு பயன்படுத்தி வந்த கார், ஆட்டோ , இரண்டு சக்கர வாகனம் மற்றும் செல்போன் 7 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதில் நபில் பெங்களூரில் உள்ள ஐடி கம்பெனி ஒன்றில் பணியாற்றுகின்ற நிலையில், கஞ்சா போதைப்பொருள் பயன்பாட்டுக்கு அடிமையாக இருப்பது தெரியவந்தன. பயன்பாட்டாளராக இருந்த நபில், அதனை கடத்தி தமிழ்நாடு மட்டும் கேரளாவில் விற்பனை செய்யும் கும்பலோடு கைக்கு கோர்த்து, போதை பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தன. கேரளாவில் தொழில் செய்து வந்த கிரண், தொழிலில் நட்டம் ஏற்பட்டதனால் கஞ்சா, மெத்தப்படைமன் போதைப்பொருள் விற்பனை செய்யும் சட்டவிரோத செயல்களில் ஈடுபட ஆரம்பித்ததும் காவல்துறை நடத்திய தீவிர விசாரணையில் தெரிய வந்திருக்கின்றன. இதில் ஜெயக்குமார் அப்துல் நாசர் உள்ளிட்டோர் மீது ஏற்கனவே போதை பொருள் விற்பனை செய்ததற்காக வழக்குகள் பதியப்பட்டு இருப்பது போலீசார் விசாரணையில் தெரிய வந்தன. போதைப் பொருள் விற்பனை கும்பலை கூண்டோடு கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.