தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் கடந்த 1-ம் தேதி கொண்டாடப்பட்டது.

பிறந்தநாள் விழாவை இந்த மாதம் முழுவதும் சிறப்பாக தி.மு.க.வினர் கொண்டாடி வருகிறார்கள். திருப்பூர் மாவட்டத்திலும் முதல்வர் பிறந்த நாள் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி திருப்பூர் 43 வது வட்ட தி.மு.க. சார்பில் முதல்வர் பிறந்தநாளை முன்னிட்டு 1,072 பேருக்கு அறுசுவை கிடா விருந்து வழங்கும் நிகழ்ச்சி, திருப்பூர் கருவம்பாளையம் ஏ.பி.டி. ரோட்டில் நடைபெற்றது.

இதற்கு செல்வராஜ் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பொதுமக்களுக்கு மட்டன் பிரியாணி, சிக்கன் கிரேவி, முட்டை உள்ளிட்ட அறுசுவை உணவுகளை வழங்கினார்.

இதில் மேயர் தினேஷ்குமார், தெற்கு மாநகர செயலாளர் டி.கே.டி.மு. நாகராஜன், வடக்கு மாநகர மாணவரணி அமைப்பாளர் திலகராஜ், வட்ட செயலாளர் பி.கே. கணேஷ், பகுதி செயலாளர் மியாமி ஐயப்பன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சசிகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதில் முதல்வர் மு.க. ஸ்டாலின் வேடமணிந்து வந்த ஒருவர் அனைவரையும் கவர்ந்தார்.