50க்கும் மேற்பட்ட விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனுதிருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள சின்னக்கம்பாளையம் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான முட்டை கோழி பண்ணை செயல்பட்டு வருகிறது இந்த கோழிப்பண்ணையில் இருந்து வெளியேறும் ஆயிரக்கணக்கான ஈக்களால் பல்வேறு தொந்தரவுகளை விவசாயிகள் சந்திப்பதாக தெரிவித்துள்ளனர். கோழி பண்ணையை உடனடியாக மூட வலியுறுத்தி கடந்த 9-ம் தேதி விவசாயிகள் 30க்கும் மேற்பட்டவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கினர்,
இதனிடையே இந்த
முட்டை கோழி பண்ணையை மூடினால் இதை நம்பி உள்ள விவசாயிகள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என கூறி 50க்கும் மேற்பட்ட விவசாயிகள்
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டத்தில் மனு வழங்கினர்,
அதனைத் தொடர்ந்து விவசாயிகள் செய்தியாளர்களிடம் கூறுகையில்இந்த முட்டை கோழி பண்ணையை நம்பி ஏராளமான விவசாயிகள் வாழ்வாதாரமாக உள்ளது மேலும்
ஏராளமான விவசாயிகள் வங்கிகளில் கடன் பெற்று கோழி பண்ணை வைத்து நடத்தி வருகின்றனர்,
இந்த கோழிப்பண்ணை மூடப்பட்டால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்,ஏராளமான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குகின்றனர்,கோழிப்பண்ணையால் கிராமங்களுக்கு நன்மை தான் உள்ளது.தீமை இல்லை என்றும்
கோழிப்பண்ணையால்ஈக்கள் பாதிப்பு நிலத்தடி நீர் பாதிப்பு எனக் கூறுவது உண்மைக்கு புறம்பானது
கோழி பண்ணைக்கு தேவையான இயற்கை கோழி உரம் வழங்குவதுடன்
விவசாயிகள் விளைவிக்கக் கூடியமக்காச் சோளம் பெற்றுக் கொண்டு அதற்கான உரிய பணம் வழங்கியும், இந்த கிராமத்தில்படிக்கின்ற ஏழை எளிய மாணவ மாணவிகளுக்கு கல்விஉதவி தொகையும் வழங்குகின்றனர்,