மதுரை தெப்பக்குளம் அருகே உள்ள புது ராமநாதபுரம் சாலையில் கிருஷ்ணா ஏஜென்சி என்ற பெயரில் ராம்குமார் என்பவர் பிஸ்கட் மற்றும் மிட்டாய் மொத்த வியாபாரம் செய்து வருகிறார். பிரபல பிஸ்கட் நிறுவனங்களின் பொருட்களை வாங்கி மதுரை மற்றும் சுற்றியுள்ள பல்வேறு இடங்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்நிலையில் நேற்று நள்ளிரவில் திடீரென கரும் புகை குடோனில் இருந்து வருவதை கண்ட ஊழியர்கள் உடனடியாக தீயணைப்பு துறைக்கு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதற்குள் தீ மளமளவென பரவியது. அனுப்பானடி ,பெரியார் பேருந்து நிலையம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து ஜந்து தீயணைப்பு வாகனங்களில் 20க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயணைப்பு பணியில் ஈடுபட்டனர் குடோன் அருகிலேயே பள்ளி இருப்பதால் பரபரப்பு ஏற்பட்டது.

10க்கும் மேற்பட்ட மாநகராட்சி வாகனங்களில் தண்ணீர் கொண்டு வரப்பட்டது.குடோனை சுற்றி இருந்த தகர சீட்டுகள் வெட்டி எடுக்கப்பட்டு அதன் மூலம் தண்ணீர் பீய்ச்சபட்ட பின்பு தீ ஓரளவு கட்டுக்குள் வந்தது . நான்கு மணி நேரத்திற்கு மேலாக தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். அட்டை பெட்டியில் பிஸ்கட் மற்றும் சாக்லேட் வைக்கப்பட்டு இருந்ததால் கரும்புகை சுற்றுப்பகுதியில் முழுவதுமாக சூழ்ந்தது.