வடக்கிபாளையம் காவல் நிலையத்தை விவசாயிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு.தமிழகத்தில் கள் இறக்கி விற்பனை செய்ய வேண்டும் என்று தென்னை விவசாயிகள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் பொள்ளாச்சி நெகமம், ஆனைமலை,
வடக்கிபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் கள் இறக்கி விற்பனை செய்து வருகின்றனர்.அப்படி விற்பனை செய்யும் கள்ளை பறிமுதல் செய்து விவசாயிகள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று பொள்ளாச்சி அருகே உள்ள தேவம்பாடி வலசு கிராமத்தில் கணேஷ் என்ற விவசாயி தோட்டத்தில் கள் இறக்கிய விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. அங்கு சென்றுவடக்கிபாளையம் காவல் நிலைய போலீசார் கள்ளை பறிமுதல் செய்து , செய்ய முற்பட்ட போது வாக்குவாதம் ஏற்பட்டது.
